ஜோதிட தொகுப்பு-15

March 6, 2010

Untitled Page

table.MsoNormalTable
{font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
}
p.MsoNormal
{margin-top:0in;
margin-right:0in;
margin-bottom:10.0pt;
margin-left:0in;
line-height:115%;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
}

திருமண நட்சத்திர பொருத்தம் – ஆண்களுக்கு

வ.எண்

ஆண் நட்சத்திரத்திற்கு

பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

1.

அஸ்வனி

பரணி,
மிருகசீரிஷம்,


புனர்பூசம்
,

பூரம்

2.

பரணி

ரோகிணி,
சுவாதி,


உத்திராடம்

2, 3, 4,
திருவோணம்,
அஸ்வனி

3.

கார்த்திகை
1
ம் பாதம்

சித்திரை
3, 4,
அவிட்டம்

1, 2

4.

கார்த்திகை
2, 3, 4
ம் பாதங்கள்

அஸ்தம்,
சித்திரை

1, 2,

கேட்டை,

அவிட்டம்

3, 4

5.

ரோகிணி

மிருகசீரிஷம்
1, 2,
உத்திரம்,

அனுஷம்,


உத்திரட்டாதி

6.

மிருகசீரிஷம்
1, 2
ம் பாதங்கள்

புனர்பூசம்
4,
அஸ்தம்,

பூரட்டாதி,

ரேவதி,

ரோகிணி

7.

மிருகசீரிஷம்
3, 4
ம் பாதங்கள்

திருவாதிரை,
புனர்பூசம்,

அஸ்தம்,

சுவாதி,

பூரட்டாதி

4,
ரேவதி

8.

திருவாதிரை

பூசம்,
உத்திராடம்

1,


உத்திரட்டாதி
,


மிருகசீரிஷம்

3, 4

9.

புனர்பூசம்
1, 2, 3
ம் பாதங்கள்

பூசம்,
சுவாதி,

பூராடம்,


உத்திரட்டாதி
,

ரேவதி

10.

புனர்பூசம்
4
ம் பாதம்

பூசம்,
அனுஷம்,

பரணி,

ரோகிணி

11.

பூசம்

உத்திரம்,
அஸ்வனி,


புனர்பூசம்

4

12.

ஆயில்யம்

அஸ்தம்,
அனுஷம்,

பூசம்

13.

மகம்

சித்திரை,
அவிட்டம்

3, 4

14.

பூரம்

உத்திரம்,
அஸ்தம்,

சுவாதி,


உத்திராடம்

1,
திருவோணம்

15.

உத்திரம்
1
ம் பாதம்

பூராடம்,
ரோகிணி,


மிருகசீரிஷம்
,

பூரம்

16.

உத்திரம்
2, 3, 4
ம் பாதங்கள்

பூராடம்,
திருவோணம்,

ரேவதி

17.

அஸ்தம்

உத்திராடம்,
உத்திரட்டாதி,


மிருகசீரிஷம்

3, 4

18.

சித்திரை
1, 2
ம் பாதங்கள்

விசாகம்
4,
திருவோணம்,

ஆயில்யம்

19.

சித்திரை
3, 4
ம் பாதங்கள்

விசாகம்,
திருவோணம்,

சதயம்,

ஆயில்யம்

20.

சுவாதி

அனுஷம்,
பூரட்டாதி

1, 2, 3,

புனர்பூசம்
4,
பூசம்

21.

விசாகம்
1, 2, 3
ம் பாதங்கள்

சதயம்,
ஆயில்யம்

22.

விசாகம்
4
ம் பாதம்

சதயம்

23.

அனுஷம்

உத்திராடம்
2, 3, 4,
பூரட்டாதி,

ரேவதி,

உத்திரம்

24.

கேட்டை

திருவோணம்,
அனுஷம்

25.

மூலம்

அவிட்டம்,
கார்த்திகை

1,


மிருகசீரிஷம்

3, 4

26.

பூராடம்

உத்திராடம்,
திருவோணம்,

அஸ்வனி,


திருவாதிரை
,

சுவாதி,

உத்திரம்

2-3-4,
அஸ்தம்

27.

உத்திராடம்
1
ம் பாதம்

பரணி,
மிருகசீரிஷம்

3, 4,

அஸ்தம்,

பூராடம்

28.

உத்திராடம்
2, 3, 4
ம் பாதங்கள்

பரணி,
மிருகசீரிஷம்

1, 2

29.

திருவோணம்

உத்திரட்டாதி,
அஸ்வனி,


மிருகசீரிஷம்

1, 2,
அனுஷம்

30.

அவிட்டம்
1, 2
ம் பாதங்கள்

புனர்பூசம்
4,
ஆயில்யம்,

சுவாதி,

விசாகம்,

திருவோணம்

31.

அவிட்டம்
3, 4
ம் பாதங்கள்

சதயம்,
புனர்பூசம்

1, 2, 3,

விசாகம்
4

32.

சதயம்

கார்த்திகை,
மிருகசீரிஷம்,

மகம்,

விசாகம்

4,
அனுஷம்,
அவிட்டம்
3, 4

33.

பூரட்டாதி
1, 2, 3
ம் பாதங்கள்

உத்திரட்டாதி,
ரோகிணி,

பூரம்,

அனுஷம்,

பூராடம்

34.

பூரட்டாதி
4
ம் பாதம்

உத்திரட்டாதி,
பூராடம்,

திருவோணம்,

ரோகிணி,

பூசம்

35.

உத்திரட்டாதி

ரேவதி,
புனர்பூசம்,

உத்திரம்

2, 3, 4,
உத்திராடம்,
பூரட்டாதி

4

36.

ரேவதி

பரணி,
பூசம்,

அஸ்தம்,

பூராடம்,


உத்திரட்டாதி

 

 

 

 

*******************************************************************

திருமண நட்சத்திர பொருத்தம் – பெண்களுக்கு

வ.எண்

பெண் நட்சத்திரத்திற்கு

பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்

1.

அஸ்வனி

பரணி,
திருவாதிரை,

பூசம்,

பூராடம்,

திருவோணம்,

சதயம்

2.

பரணி

புனர்பூசம்,
உத்திராடம்,

ரேவதி,

அஸ்வனி

3.

கார்த்திகை
1
ம் பாதம்

சதயம்

4.

கார்த்திகை
2, 3, 4
ம் பாதங்கள்

சதயம்

5.

ரோகிணி

மிருகசீரிஷம்
1, 2,
புனர்பூசம்

4,

உத்திரம்

1,
பூரட்டாதி,
பரணி

6.

மிருகசீரிஷம்
1, 2
ம் பாதங்கள்

உத்திரம்
1,
உத்திராடம்

2, 3, 4,

திருவோணம்,
சதயம்,
அஸ்வனி,
ரோகிணி

7.

மிருகசீரிஷம்
3, 4
ம் பாதங்கள்

திருவாதிரை,
உத்திரம்,

அஸ்தம்,

மூலம்,


உத்திராடம்

2, 3, 4,
சதயம்,
பரணி

8.

திருவாதிரை

பூரம்,
பூராடம்,

பரணி,


மிருகசீரிஷம்

3, 4

9.

புனர்பூசம்
1, 2, 3
ம் பாதங்கள்

அவிட்டம்
3, 4,
உத்திரட்டாதி,


மிருகசீரிஷம்

3, 4

10.

புனர்பூசம்
4
ம் பாதம்

பூசம்,
சுவாதி,

அவிட்டம்

1, 2,
உத்திரட்டாதி,
மிருகசீரிஷம்

11.

பூசம்

ஆயில்யம்,
அஸ்தம்,

சுவாதி,

விசாகம்

1-2-3,
பூரட்டாதி
4,
ரேவதி,


திருவாதிரை
,


புனர்பூசம்

12.

ஆயில்யம்

சித்திரை,
அவிட்டம்

1, 2

13.

மகம்

சதயம்

14.

பூரம்

உத்திரம்
1,
பூரட்டாதி

1, 2, 3,

அஸ்வனி

15.

உத்திரம்
1
ம் பாதம்

சுவாதி,
அனுஷம்,

பரணி,

ரோகிணி,

பூசம்,

பூரம்

16.

உத்திரம்
2, 3, 4
ம் பாதங்கள்

அனுஷம்,
பூராடம்,

ரோகிணி,

பூசம்,

பூரம்

17.

அஸ்தம்

பூராடம்,
உத்திராடம்

1,

ரேவதி,


மிருகசீரிஷம்
,

பூரம்,

ஆயில்யம்,


கார்த்திகை

2, 3, 4

18.

சித்திரை
1, 2
ம் பாதங்கள்

கார்த்திகை
2, 3, 4,
மகம்

19.

சித்திரை
3, 4
ம் பாதங்கள்

கார்த்திகை
1,
மகம்

20.

சுவாதி

பூராடம்,
அவிட்டம்

1, 2,

பரணி,


மிருகசீரிஷம்

3, 4,
பூரம்,
புனர்பூசம்

21.

விசாகம்
1, 2, 3
ம் பாதங்கள்

அவிட்டம்
1, 2,
சித்திரை

3, 4

22.

விசாகம்
4
ம் பாதம்

அவிட்டம்,
சதயம்,

சித்திரை

23.

அனுஷம்

கேட்டை,
சதயம்,

பூரட்டாதி

1, 2, 3,
ரோகிணி,
புனர்பூசம்,

ஆயில்யம்,

அஸ்தம்,

சுவாதி

24.

கேட்டை

கார்த்திகை
2, 3, 4

25.

மூலம்

உத்திரட்டாதி,
பூரம்,

சுவாதி,

பூராடம்

26.

பூராடம்

பூரட்டாதி,
புனர்பூசம்

1, 2, 3,

உத்திரம்,
ரேவதி

27.

உத்திராடம்
1
ம் பாதம்

உத்திரட்டாதி,
திருவாதிரை,

பூரம்,

பூராடம்,

அஸ்தம்,

சுவாதி

28.

உத்திராடம்
2, 3, 4
ம் பாதங்கள்

உத்திரட்டாதி,
பரணி,

பூசம்,

அஸ்தம்,

அனுஷம்,

பூராடம்

29.

திருவோணம்

அவிட்டம்
1, 2,
பூரட்டாதி

4,

பரணி,


புனர்பூசம்

4,
உத்திரம்
2, 3, 4,
சித்திரை,
கேட்டை,

பூராடம்

30.

அவிட்டம்
1, 2
ம் பாதங்கள்

கார்த்திகை
1,
மூலம்

31.

அவிட்டம்
3, 4
ம் பாதங்கள்

கார்த்திகை,
சதயம்,

மகம்,

மூலம்

32.

சதயம்

சித்திரை
3, 4,
விசாகம்,

அவிட்டம்

3, 4

33.

பூரட்டாதி
1, 2, 3
ம் பாதங்கள்

மிருகசீரிஷம்
1, 2,
சுவாதி,

அனுஷம்

34.

பூரட்டாதி
4
ம் பாதம்

உத்திரட்டாதி,
மிருகசீரிஷம்,

அனுஷம்

35.

உத்திரட்டாதி

ரேவதி,
திருவாதிரை,

ரோகிணி,


புனர்பூசம்

1, 2, 3,
அஸ்தம்,
திருவோணம்,

பூரட்டாதி

36.

ரேவதி

மிருகசீரிஷம்,
புனர்பூசம்

1, 2, 3,

உத்திரம்
2, 3, 4,
அனுஷம்,
உத்திரட்டாதி

Advertisements

ஜோதிட தொகுப்பு-14

March 6, 2010

மீன லக்கினம்.

யோககாரகர்கள்: செவ்வாய், குரு

யோகமில்லாதவர்கள்: சனி, சுக்கிரன், சூரியன், புதன்

ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கை

மாரகஅதிபதி: (killer) சனி, புதன்

, மாரக தசை

மாரக தசை நடந்தால் கண்டம், இறப்பு, நேரலாம்

, பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்

பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்:

1ஆம் வீடு: தலைப் பகுதி

2ஆம் வீடு: முகம், ஆண்களுக்கு வலது கண், பெண்களூக்கு
இடது கண், வாய், நாக்கு,

3ஆம் வீடு: காதுகள், கைகள், உணவுக்குழாய், மூச்சுக் குழாய்

4ஆம் வீடு: நுரையீரல், இதயம் (Lungs and Heart)

5ஆம் வீடு இரைப்பை, கணையம் (Stomach,Liver )

6ஆம் வீடு: Small Intestine

7ஆம் வீடு.:உட் பிறப்பு உறுப்புக்கள்,சிறுநீரகம்
Internal Sexual Organs, Kidneys

8.வெளி பிறப்பு உறுப்புக்கள்(ஆண்குறி, பெண்குறி), குதம்
External Sexual Organs, Large Intestine, Anus

9ஆம் வீடு: இடுப்பு, இடுப்பு இணைப்புக்கள் அனைத்தும்

10ஆம் வீடு: தொடைகள், கால்களின் மேற்பகுதி

11ஆம் வீடு: கால்களின் கீழ்ப்பகுதி, முழங்கால் முதல் பாதத்திற்கு முன் பகுதிவரை

12ஆம் வீடு: பாதம், ஆண்களுக்கு இடது கண், பெண்களூக்கு வலது கண்

, சந்திரகிரணம்

கேது, சூரியன், மற்றும் சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும், வான வெளியில் ஒரே பாகைக்கு வரும்போது சந்திரகிரணம் நிகழும் . சந்திர கிரகணம் பற்றி மிக எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், காந்த வயலில் அசைக்கப்படும் செப்பு கம்பியில் எப்படி மின்சாரம் உருவாகிறதோ (Electrons starts moving and producess electric current) அதே போல் சந்திர கிரகணத்தின் போது சூரியனில் இருந்து வரும் ஆற்றல் பூமியால் மறைக்க படுவதால் சந்திரனில் இருந்து வரும் கதிர்கள் பாதிகப்படும். அது இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களிலும் சில பாதிப்புகளை உருவாக்குகிறது.

அதை தவிர்க்க நம் குருவால் கொடுக்கப்பட்டுள்ள பஞ்ச்பூத நவகிரக தவம் பேருதவி செய்யும்.
————————————————————

, புத்திர தோஷம்

5ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் புத்திர தோஷம்.

, களத்திர தோஷம்

7ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் களத்திர தோஷம்.

, ஆயுளுக்குத் தோஷம்

8ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் ஆயுளுக்குத் தோஷம்.

, தந்தைக்குத் தோஷம்

9ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் தந்தைக்குத் தோஷம்.

, தாய்க்குத் தோஷம்

4ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் தாய்க்குத் தோஷம்.

, அதீத தோஷம்

திருமணம் தள்ளிக் கொண்டே போனால் அது தாமதக் கணக்கில் வரும்! ஆகவே ஒரு பெண்ணிற்கு 18 வயதிலிருந்து 26 வயதிற்குள் (14 + 12) திருமணம் நடைபெற வேண்டும். (அந்த 36ல் 2/3 பங்கை அவள் பசியாறுவதற்குக் கொடுங்கள் சாமிகளா) அதே போல திருமணமாகி மூன்று வருடங்களுக்குள் தம்பதியர்க்குக் குழந்தை பிறந்து விட வேண்டும். இல்லையென்றால் அதுவும் தாமதக் கணக்கில் வரும்! அந்தத் தாமதம் தோஷம் எனப்படும். அதீத தோஷமென்றால் என்ன ஆகும்? அந்த வீட்டுக்குரியவன் நீசமாகி அல்லது களத்திரகாரகன் சுக்கிரன் நீசமாகி, இந்த அமைப்பும் உடன் இருந்து கூட்டாகச் சொதப்புவது அதீத தோஷம் எனப்படும் திருமணமே நடக்காது. திருமணம் நடந்தால் அல்லவா குழந்தையைப் பற்றிய பேச்சு! தோஷத்திற்கு என்ன பரிகாரம்? பிரார்த்தனை ஒன்றுதான் பரிகாரம். ராகு, கேதுவிற்குரிய தலங்களுக்குச் சென்று வழிபடுவது சாலச் சிறந்தது!

, சந்திரன் காரகத்துவம்

நீருக்கான கிரகம், ஆறுகளில் நீரோட்டங்களைக் கட்டுக்குள் வைத்திருப்பவர் ,தாவரங்கள் அனைத்திற்கும் அதிபதி அவர்தான், உலகைப் பசுமையாக வைத்திருப்பவர் அவர்

30 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சியில் பெளர்ணமி வரும். வருடத்திற்கு 365.25 நாட்கள் என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் கீழே குறிப்பிட்டுள்ள நட்சத்திரத்தன்று, 180 பாகைகள் எதிர் எதிராக நின்று முழுப் பெளர்ணமி திதியை சூரியனும், சந்திரனும் கொடுக்கும். அந்த நாட்களில், தகிழகத்தில் உள்ள முருகன் கோவில்களிலும், சிவாலயங்களிலும் பெரிய அளவில் விழாக்கள் நடைபெறும். பெரும் திரளான மக்கள் வந்து கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிப்பார்கள். தைப்பூசம் பழநியில் விசேசமாக நடைபெறும். வைகாசி விசாகம் திருச்செந்தூரில் விசேஷமாக நடைபெறும். கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை திருவண்ணாமலையில் விஷேசமாக நடைபெறும். இது அனைவரும் அறிந்ததே! பெளர்ணமி சந்திரனுக்கு உகந்த நாட்கள். தை – பூச நட்சத்திரம் மாசி மாதம் – மக நட்சத்திரம் பங்குனி மாதம் – உத்திர நட்சத்திரம் சித்திரை மாதம் – சித்திரை நட்சத்திரம் வைகாசி மாதம் – விசாக நட்சத்திரம் ஆவணி மாதம் – அவிட்ட நட்சத்திரம் கார்த்திகை மாதம் – கிருத்திகை நட்சத்திரம் சந்திரனுக்கான நவரத்தினம் முத்து. சந்திரனுக்கான உலோகம் வெள்ளி. சந்திரனுக்கான எண் 2

, உத்தராயணம்

சூரியன் வடக்கு திக்கில் நகரும் உத்தராயண புண்ணிய காலமான மகா கும்பமேளா எனப்படும்

, சூரிய கிரகணம்

சூரிய மண்டலத்தில் சூரியன்,சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்று வான் பொருட்கள் ஒரே நேர்கோட்டில் நிற்பதை கிரகணம் என்கிறோம்

, கங்கண சூரிய கிரகணம்

108 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் கங்கண சூரிய கிரகணம் தோன்ற உள்ளது. சூரியன் முழுவதுமாக மறைக்கப்படுவதே கங்கண சூரிய கிரகணம். புவியை நிலவு ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இதனால் புவிக்கு அருகே வரும்போது 3 லட்சத்து 57 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தொலைவிலும், புவியை விட்டு விலகி செல்கையில் 4 லட்சத்து 7 ஆயிரத்து 100 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவு இருக்கும்.

தொலைவில் இருக்கும் போது நிலவின் தோற்றம் சிறியதாக இருக்கும். எனவே புவியை விட்டு விலகிச் செல்கையில் சூரிய கிரகணம் நடந்தால் சந்திரனால் சூரியனை முழுமையாக மறைக்க முடியாது. இதனையே கங்க சூரிய கிரகணம் என்கிறோம்.

சூரியனுக்கும் பூமிக்குமிடையில் சந்திரன் வரும் பொழுது சூரிய கிரகணமும், சூரியனுக்கும் சந்திரனுக்குமிடையில் பூமி வரும்பொழுது சந்திர கிரகணமும் ஏற்படுவதை நாம் அடிக்கடி காண்கின்றோம். ஆனால் சூரியனுக்கும் பூமிக்குமிடையில் வேறு கிரகங்கள் வருவதனால் ஏற்படும் சூரிய கிரகணம் அடிக்கடி நிகழும் ஒன்றல்ல. கடந்த 122 ஆண்டுகளுக்குப் பின்னர் சூரியனுக்கும் பூமிக்குமிடையில் வெள்ளிக் கிரகம் அதாவது வீனஸ் தனது சுழற்சிப் பாதையில் செல்லும்போது சூரியன், பூமி மற்றும் வெள்ளி கிரகங்கள் என்பன ஒரே நேர்காட்டில் வருவதனால் ஏற்படும் சூரிய கிரகணம்

புதன் கிரகமும், வெள்ளிக் கிரகமும் பூமியை விட சூரியனை வேகமாகச் சுற்றுகின்றன. அத்துடன் அவை பலமுறை பூமிக்கும் சூரியனுக்குமிடையில் வந்து போகின்றன. வெள்ளிக் கிரகம் ஒருமுறை சூரியனைச் சுற்றிவர எடுக்கும் காலம் 227.4 நாட்கள்தான். எனினும் நாம் பூமியில் இருந்து பார்க்கும் பொழுது இவை சூரியன் இருக்கும் நேர்கோட்டிற்கு மேலாகவோ அல்லது கீழாகவோ செல்கின்றன. இதற்குக் காரணம் வெள்ளிக் கிரகம் பூமியின் சுழற்சிப் பாதையிலிருந்து 3.4பாகை விலகிச் செல்வதுதான். எனவேதான் ஒவ்வொரு முறையும் இவற்றால் கிரகணம் ஏற்படுவதில்லை. 2004ஆம் ஆண்டில் நடைபெறும் கிரகணத்தின் போது வெள்ளிக் கிரகத்தின் நிழல் சூரியனின் வடதுருவத்தினு}டே செல்லும் அதேவேளை 2012ஆம் ஆண்டு நடைபெறும் கிரகணத்தின் போது இக்கிரகத்தின் நிழல் சூரியனின் தென்துருவப் பகுதியூடாகச் செல்லும். இக்கிரகணத்தைச் தமக்குச் சாதகமாக்கி பல விடயங்களை அறிய முற்பட்டுள்ளார்கள் விஞ்ஞானிகள். சூரியனுக்கும் பூமிக்குமிடையில் உள்ள து}ரத்தையும், மற்றும் வெள்ளிக் கிரகத்தின் விட்டத்தையும் ஓரளவு துல்லியமாகக் கணிப்பிடவும், எமது சூரிய குடும்பத்தில் மேலும் கண்டறியப்படாத கிரகங்கள் இருக்கின்றனவா என ஆராயவும் இக்கிரகணம் வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கு கணிசமான அளவு உதவி புரியவுள்ளது. Edmund Halley என்பவர்தான் வெள்ளிக் கிரத்தினால் ஏற்படும் கிரகணத்தின்போது கெப்லரின் மூன்றாவது விதியைப் பயன்படுத்தி சூரியனுக்கும் பூமிக்குமிடையிலான தூரத்தைக் கணிக்கலாம் என கண்டறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படும் ஒளிமுறிவு காரணமாக இம்முறையைக் கொண்டு து}ரத்தைக் கணிப்பது சிரமமாகவே இருந்து வருகின்றது.

வளைய சூரிய கிரகணம் : சூரிய கிரகணங்களில் பல்வேறு வகைகள் உண்டு. சந்திரன் பூமியை சுற்றி வருகிறது. பூமி, சூரியனை நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. ஒவ்வொரு சூரிய கிரகண தினத் தன்றும் இவை அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வந்தால் கூட, தூரம், கோணம் ஆகியவற்றில் தொடர்ந்து மாற்றங்கள் இருக்கும். இதனால்தான் எல்லா சூரிய கிரகணமும் ஒரே மாதிரியாக அமைவதில்லை. சூரிய கிரகணத்தின் போது, சூரியனை சந்திரன் முழுமையாக மறைக்கும் போது, சந்திரனின் நிழல் பூமியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் விழும். அந்த நிழல் விழும் இடத்திலிருப்பவர்களுக்கு முழு சூரிய கிரகணம் தெரியும்.அந்த இடத்திலிருந்து தொலைவில் உள்ளவர் களுக்கு பகுதி சூரிய கிரகணம் தெரியும். அந்த பகுதியைத் தவிர்த்து பூமியின் மற்ற பகுதியில் சூரிய கிரகணம் தெரியாது.சூரியனும் பூமியும் ஒரே நேர்கோட்டிலும் நெருங்கியும் வரும் போது, பூமியைச் சுற்றும் சந்திரன், பூமியிலிருந்து அதன் அதிகபட்ச தொலைவில் உள்ள போது, சூரியனின் வட்டுப் பகுதியை சந்திரானால் முழுமை யாக மறைக்க முடியாமல் போகிறது. சூரியனின் மையப் பகுதியை மறைக்கும் சந்திரனால் விளிம்புப் பகுதியை மறைக்க முடியாமல் போய்விடுகிறது. அப்போது வளைய சூரியகிரகணம் ஏற்படுகிறது. இது கங்கண சூரிய கிரகணம் என்றும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது

, ஜாதகங்களில் 4 வகைகள்

ஜாதகங்களில் 4 வகைகள் (பிரிவுகள்) இருக்கின்றன:

1.தர்ம ஜாதகம

2.தன ஜாதகம்

3. காம ஜாதகம்

4. ஞான ஜாதகம்

1.தர்ம ஜாதகம் என்பது ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய வீடுகள் நன்றாக அமையப்பெற்ற ஜாதகம். 1ஆம் வீடு (லக்கினம்) 5ஆம் வீடு (பூர்வ புண்ணியம்) 9ஆம் வீடு(பாக்கிய ஸ்தானம்) ஆகிய மூன்றும் நன்றாக இருக்க வேண்டும். அந்த ஜாதகன் தான் பல தர்மங்களைச் செய்வான். கோவில் கட்டுவான் அல்லது கோவில்களுக்குத் திருப்பணிகள் செய்வான். குளங்கள் வெட்டுவான். இருக்கும்போதும், பெயரோடும், புகழோடும் விளங்குவான்.இறந்த பின்னும் அவன் பெயர் நிலைத்து நிற்கும்.

2. "தன" ஜாதகத்தில் இரண்டு, ஆறு, பத்து ஆகிய வீடுகள் நன்றாக அமைந்திருக்கும். (House of Finance, House of Servants and House of Profession). இந்த ஜாதகன்தான் நிறைய சம்பாதிப்பன். நிறையப் பொருள் சேர்ப்பான். செல்வந்தனாகத் திகழ்வான். ஆனால் அந்தப் பணம் அவனுக்கு முழுமையாகப் பயன்படாது. அவனைச் சார்ந்தவர்கள் அல்லது சேர்ந்தவர்கள் அதை அனுபவிப்பார்கள். சேர்க்கும் பாக்கியம் அவனுக்கு. அனுபவிக்கும் பாக்கியம் வேறு ஒருவனுக்கு. He will earn lot of money and leave it for others to enjoy. வைத்துவிட்டு சிவனடிக்குச் சென்று விடுவான்.

3. மூன்றாவது "காம" ஜாதகம். இவர்கள் வாழ்க்கையின் எல்லா இன்பங்களையும் ருசித்துவிட்டு அல்லது ஒரு கை பார்த்துவிட்டுப் போகிறவர்கள். இவர்கள் சம்பாதித்துத்தான் செலவழிக்க வேண்டும் என்பதில்லை. யாருடைய பணமோ அல்லது பொருளோ இவர்களைத் தேடிவரும். அது அப்பச்சி தேடிவைத்த பணமாக இருக்கலாம் அல்லது அய்யா தேடிவைத்த பணமாக இருக்கலாம் (Father or Grandfather) அல்லது அம்மான் தேடிவைத்த பணமாக இருக்கலாம். அம்மான் என்பதை இங்கே மாமனார் என்று பொருள் கொள்க! இவர்களுக்கான ஜாதக வீடுகள். மூன்று, ஏழு, பதினொன்று. (House of courage, House of women and House of Gains)

4."ஞான" ஜாதகம் என்பது நான்காவது வகையைச் சேர்ந்தது. நான்கு, எட்டு, பன்னிரெண்டு ஆகிய வீடுகளின் கூட்டணி. அதாவது அந்த மூன்று வீடுகளும் வலுவாக இருக்கும்.(House of Comforts, House of Difficulties and House of Losses) இந்த நான்காம் பிரிவு ஆசாமிகள்தான் ஞானிகள். வாழ்க்கையின் எல்லா சுகங்களும் சரிவரக் கிடைக்காமல் அல்லல்பட்டு, அவதிப்பட்டு, பல விரையங்கள், நஷ்டங்கள், கஷ்டங்கள், துன்பங்கள், துரோகங்கள், சோகங்கள் என்று அனைத்தையும் சந்தித்துவிட்டு அல்லது உணர்ந்து அனுபவித்து விட்டு,"இதுதான் உலகம் என்று முடிவிற்கு வருபவர்கள்

, பாபகர்த்தாரி யோகம்

அந்த விதியின் பெயர் பாபகர்த்தாரி யோகம

1.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord) பதினொன்றாம் வீட்டிற்கு உரியவன் (11th Lord) ஆகிய மூவரும் நல்ல நிலைமியில் இருந்தால் ஜாதகன் வியாபாரம் செய்து அல்லது தொழில செய்து அல்லது பெரிய நிறுவனத்தில் உயர் வேலையில் இருந்து நிறையப் பொருள் ஈட்டுவான்.

2.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord) இருவர் மட்டும் நன்றாக இருந்தால் உத்தியோகம் பார்த்து வசதியாக வாழ்வான்.

3.லக்கின அதிபதி (1st Lord) பலவீனமாக இருந்தால் – அதாவது ஆறு எட்டு, பன்னிரெண்டு ஆகிய இடங்களில் மறைந்து விட்டால் அல்லது பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord) அப்படியிருந்தாலும் ஜாதகனுக்குக் கஷ்ட ஜீவனம்தான். மற்ற கிரகங்கள் வலுவாக இருந்தால் விதிவிலக்காக சுக ஜீவனமாக இருப்பான்.

4.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன் (10th Lord) இருவரும் பலம் பொருந்தி கேந்திர திரிகோணங்களில் இருந்தால் ஜாதகன் தான் பிறந்த ஊரில் அல்லது இருக்கும் ஏரியாவில் பிரபலமாக இருப்பான்.பலருக்கும் உதவி செய்பவனாக இருப்பான்.

, பணவரவு எப்படி

இரண்டு, ஐந்து, பதினொன்று ஆகிய மூன்று வீடுகளும் சேர்ந்துதான் ஒரு ஜாதகனின் பணபலத்தை நிர்ணயம் செய்யும். இம்மூன்று வீடுகளும் பலமாக இருந்தால் ஜாதகனுக்கு நிறையப் பணம் வரும் செல்வந்தனாக உருவெடுப்பான். இல்லையென்றால் இல்லை

இரண்டாம் வீடுதான் House of finance என்றாலும், அங்கே பணத்தைக் கொண்டுவந்து கொட்டுபவை மற்ற இரண்டு வீடுகள்.

ஐந்தாம் வீட்டை லெட்சுமிகரமான வீடு என்று சொல்லலாம். எதிர்பாராத பண வரவுக்கெல்லாம் இந்த வீட்டின் அமைப்புத்தான் காரணம். பங்கு வணிகத்தில் சிலர் லட்சம் லட்சமாக அல்லது கோடி கோடியாகச் சம்பாதிப்பதற்கெல்லாம் இந்த வீடுதான் காரணம். The house which governs the money coming from speculation – shares, stock market and related instruments. வலிமையான ஐந்தாம் வீடும், வலிமையான ஒன்பதாம் வீடும் இருக்கும் ஜாதகனுக்குப் பணம் மழையாகக் கொட்டும். அண்டாக்களில் பிடித்துவைத்துக்கொள்ள வேண்டியது மட்டுமே அவனுடைய வேலை. ஒன்பதாம் வீட்டிற்கு அதிலிருந்து ஒன்பதாம் இடம் ஐந்தாம் வீடு அதை மனதில் கொள்க A powerful 5th house along with 9th house will bring luck to an individual. 9th house is called as bhagyasthana. 5th being 9th from 9th also represents luck in the horoscope.

பதினொன்றாம் வீடு லாபஸ்தானம். House of profit ஒரு ஜாதகனின் வாழ்க்கை முறைக்கு, உங்கள் மொழியில் சொன்னால் Life Styleற்கு இந்த வீட்டின் அமைப்புத்தான் காரணம். உங்களுக்குப் பல ஆசைகள் இருக்கலாம். அந்த அசைகளை நிறைவேற்றிவைப்பது இந்த வீடுதான். பதினொன்றாம் வீடும், அதன் அதிபதியும்தான் உங்களுக்குக் கொட்டும் பணமழையின் அளவை நிர்ணயிப்பவர்கள். 11th house alone will determine what a person will earn from. The strength of the house and ruler would determine the size of source of income. This house represents gains of all kinds.

2ஆம் வீடு. இதற்குத் தனஸ்தானம் என்று பெயர் ஒரு ஜாதகனுக்கு என்ன தேறும் என்பதை அது சொல்லும். அதே போல ஜாதகனுக்கு என்ன தங்கும் என்பதையும் அது சொல்லும் 2nd House: Financially, house number 2 (dhanasthana) This house represents the net worth of an individual. It also denotes the extent to which the individual will be able to retain the money earned through sources represented by 5th and 11th house. அந்த இரண்டு வீடுகள் மட்டும் நன்றாக இருந்து அதாவது 5ம் 11ம் நன்றாக இருந்து, இந்த வீடு கெட்டிருந்தால் பணம் வரும், ஆனால் வரும் பணம் கையில் தங்காது. பல வழிகளில் செலவாகிவிடும். அதை ஓட்டைக் கை ஜாதகன் என்பார்கள். ஓட்டைக் கையில் என்ன தங்கும்? ஓட்டை வாளியில் என்ன தங்குமோ அதுதான் தங்கும்!

பதினொன்றாம் வீட்டைத் தண்ணீர்க் குழாய்க்கும் இரண்டாம் வீட்டை வாளி அல்லது அண்டாவிற்கும் உதாரணமாகச் சொல்லலாம். 11th house can be thought of as a tap and 2nd house as a bucket. The bucket is filled with water flowing from the tap. How much water will accumulate depends on the rate water flows from the tap and size of the bucket. நான்காம் வீடு சுகஸ்தானம். பணம் இன்றி சுகமேது? ஆகவே ஒரு ஜாதகன் சுகமாக வாழ்வதற்கு இரண்டாம் வீடு நன்றாக இருக்க வேண்டும். இங்கே ஒரு அதிசய ஒற்றுமையைப் பாருங்கள் இரண்டாம் வீடு, பதினொன்றாம் வீட்டிலிருந்து நான்காம் வீடு. Second house represents the accumulated wealth of the individual. ஜாதகனின் கையில் தங்கும் செல்வத்திற்கான வீடு இரண்டாம் வீடு! அதை மனதில் கொள்க!

பணவரவு எப்படி வேறுபடுகிறது? இந்த மூன்று வீட்டு அதிபதிகளின் வலிமை முக்கியம். அதோடு அவர்கள் ஒருவருக்கொருவர் ஜாதகத்தில் இணைந்து கூட்டாக அல்லது பரிவர்த்தனையாக அல்லது பரஸ்பர பார்வையோடு இருப்பதும் முக்கியம். அந்தக் கூட்டணி எந்த அளவிற்கு உள்ளதோ அந்த அளவிற்கு பணம் கிடைக்கும்.

Planetary combinations of wealth, are formed when rulers of these houses are associated with each other and with rulers of 1st, 5th and 9th house. This association could be through conjunction in good houses, exchange and through mutual aspect. Involvement of Jupiter as benefic planet in these combinations is considered extremely auspicious.

———

பணமின்றி வறுமையில் வாடுவதேன்? அல்லது பணக்கஷ்டத்தில் உழல்வதேன்? இந்த மூன்று வீட்டு அதிபதிகளும், 6ஆம் வீடு, 8ஆம் வீடு அல்லது 12ஆம் வீட்டதிபதிகளுடன் சகவாசம் வைத்திருந்தால் எப்போதும் பணக் கஷ்டம்தான் சகவாசம் என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.

——–

2ஆம் வீட்டதிபர், பதினொன்றாம் வீட்டதிபர் ஆகிய இருவரும் வலிமை இல்லாமல் இருந்தால் (அதாவது சுயவக்கத்தில் குறைந்த பரல்களுடன் இருந்தால்) ஜாதகனுக்கு வறுமை என்பது நிரந்தர நண்பனாகிவிடும். பணக்கஷ்டம் என்பது பகல் பொழுதாகிவிடும்.

 

 

 

 

, ஓரை

ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது

பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஓரைகளும் உருவாக்கப்பட்டன. சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஓரைகளை கணக்கிட்டுள்ளனர்.

சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு வானவியல் அறிஞர்கள் ஓரைகளை உருவாக்கினர். இதன்படி வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஓரையை சூரியனுக்கு அளித்தனர்.

சூரியனுக்கு அருகிலேயே சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் உள்ளன. இவற்றில் சூரியனுக்கு மிக அருகில் புதன் இருப்பதாலும், அது காற்று (வாயு) கிரகம் என்பதாலும் (ஓரை வரிசையில்) அதற்கு 2வது இடம் வழங்கினர். இதையடுத்து 3வது இடம் சுக்கிரனுக்கு, 4வது இடம் சந்திரனுக்கும், 5வது இடம் சனிக்கும், 6வது இடம் குருவுக்கும், 7வது இடம் செவ்வாய்க்கும் வழங்கினர். இதற்கு சுற்றுப்பாதை, கிரகங்களின் கதிர் வீச்சுதான் காரணம்.

இவற்றில் சுக்கிரன் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை ஆகிய மூன்றும் நல்ல ஓரைகள் எனப்படுகிறது.

வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் நல்ல ஓரையாகவே கருதப்படுகிறது.

இந்த ஓரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல் ஆகியற்றைச் செய்யலாம். இதில் சனி ஓரை ஒரு சில விடயங்களுக்கு நன்றான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது.

உதாரணமாக சனி ஓரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது.

சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும்.

செவ்வாய் ஓரை நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். இந்த ஓரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும். (Starting a war) வளைகுடா போர் கூட செவ்வாய் ஓரையில்தான் துவங்கப்பட்டது. செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம் என்பதாலும், அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய் என்பதாலும், வளைகுடாப் போர் நீண்ட காலம் நீடித்தது. இதன் காரணமாக பெரிய அழிவு ஏற்பட்டதற்கும் செவ்வாய்தான் காரணம்.

மனித வாழ்வில் ஓரைகளின் பங்களிப்பு முக்கியமானது. நம்மை அறியாமலேயே ஓரைகளின் கதிர்வீச்சை உணர முடியும். அதை உணர்ந்து நடந்தால் நலம் பெறுவீர்கள்., கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்

குரு = 3ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்

கலை = சந்திரன் = 8ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்

சனி = ஜென்மம் = 1ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்

புந்தி = புதன் = 4ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்

சேய் = செவ்வாய் = 7ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்

செங்கதிரோன் = சூரியன் = 5ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்

சீறிவரும் பாம்பு = ராகு & கேது = 2ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்

அசுரகுரு = சுக்கிரன் = 6ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும் ஜாதகனுக்குத் துன்பம் மிகுந்திருக்கும்.

அல்லது காரிய சித்தி, காரிய ஜெயம் இருக்காது.அந்தக் காலகட்டத்தில் நல்ல திசை அல்லது நல்ல திசையின் புத்தி (Sub period of a benefic planet) நடந்து கொண்டிருந்தால் இந்தக் கோச்சாரப்பலன் செல்லுபடியாகாமல் போய்விடும். இல்லையென்றால் படுத்தி எடுக்கும். கோச்சாரத்தைவிட தசா புத்திதான் முக்கியமானது!

, ராசிகள் நெருப்பு, பூமி, காற்று, நீர்

1 மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்றும் நெருப்பு ராசிகள்/லக்கினங்கள் ஆகும் (Fiery Signs) சூரியனும், குருவும் இந்தத் தன்மை மிகுந்த கிரகங்களாகும்

2 ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்றும் பூமி ராசிகள்/லக்கினங்கள் ஆகும் (Earthly Signs) செவ்வாய் இந்தத் தன்மை மிகுந்த கிரகமாகும்

3. மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்றும் காற்று ராசிகள்/லக்கினங்கள் ஆகும் (Airy Signs) புதன் இந்தத் தன்மை மிகுந்த கிரகமாகும்

4 கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்றும் நீர் ராசிகள்/லக்கினங்கள் ஆகும் (Watery Signs) சந்திரனும், சுக்கிரனும் இந்தத் தன்மை மிகுந்த கிரகங்களாகும்.

, சர ராசிகள் (Movable signs),ஸ்திர ராசிகள் (Fixed signs), உபய ராசிகள் (Dual signs)

பிறந்த ஜாதகனுக்கு உள்ள விஷேசத் தன்மைகளைத் தெரிந்து கொள்ள ராசிகளை மேலும் மூன்று விதமாகப் பிரித்துள்ளார்கள். யார் பிரித்துள்ளார்கள்? ஜோதிடத்தை வடிவமைத்த மேதைகள்! அதற்கு ஆதாரம் உண்டா? பழைய சுவடிகளில் உள்ளது. அதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். எல்லாம் நம்பிக்கை மற்றும் அனுபவ அடிப்படையில் இதுவரை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. நாமும் அதைப் பின்பற்ற வேண்டியதுதான் சர ராசிகள் (Movable signs),ஸ்திர ராசிகள் (Fixed signs), உபய ராசிகள் (Dual signs) என்று ராசிகள் மூன்று விதமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. The Vedic seers grouped the signs in three categories as Movable, Fixed and Dual

1 சர ராசிகள் (Movable signs) மேஷம் (Aries), கடகம் (Cancer), துலாம் (Libra), மகரம் (Capricorn)

2 ஸ்திர ராசிகள் (Fixed signs) ரிஷபம் (Taurus), சிம்மம் (Leo), விருச்சிகம் (Scorpio) கும்பம் (Aquarius)

3 உபய ராசிகள் (Dual signs) மிதுனம் (Gemini), கன்னி (Virgo), தனுசு (Sagittarius), மீனம் (Pisces)

1 சர ராசி ஒன்றை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்களுக்கு சில விஷேசத் தன்மைகள் உண்டு. சர ராசியில் பிறந்தவர்கள் கலகலப்பானாவர்கள். உற்சாகம், ஆர்வம் மிக்கவர்கள் செயல்களில் வேகம் உடையவர்கள். தனித்து இயங்கக்கூடியவர்கள். சுதந்திர மனப்பான்மை மிக்கவர்கள் பொறுப்பான பதவிகளுக்குத் தகுதியானவர்கள். துணிவு மிக்கவர்கள். பெயர், புகழ் என்று அவர்களை அனைத்தும் தேடிவரும். ஒரு செயலைத் திறமையாகவும், குறுகிய காலத்திலும் செய்து முடிக்கக்கூடியவர்கள்.

2 ஸ்திர ராசி ஒன்றை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்கள் மனவுறுதி மிக்கவர்கள். விடாமுயற்சி உடையவர்கள். கடுமையாக உழைப்பவர்கள். தனிமையை விரும்புபவர்கள். நம்பிக்கைக்கு உரியவர்கள். பொதுவாக இவர்களுக்கு அரசாங்க வேலைகளும், தனியார் நிறுவனங்களில் உள்ள வேலைகளும் ஒத்து வரும். ஓடிச் சென்று அதிர்ஷ்டத்தைப் பிடித்து இழுத்துவரும் தன்மை எல்லாம் இவர்களுக்குக் கிடையாது. வாழ்க்கையில் படிப்படியாகச் சென்று வெற்றியை அடைவார்கள்.

3 உபய ராசிக்காரர்கள் (Persons born in dual signs) இவர்களுடைய தன்மைக்குக் கடிகாரத்தின் பெண்டூலத்தை உதாரணமாகச் சொல்லலாம். ஊசலாடும் தன்மையை உடையவர்கள். வளைந்து கொடுத்துச் செல்லக்கூடியவர்கள். புத்திசாலிகள். இரக்கமுடையவர்கள். உணர்ச்சிமிக்கவர்கள். எதிலும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். நிலையான செயல்பாடுகள் இல்லாதவர்கள். வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ விரும்புபவர்கள். எந்தவிதமான குறிக்கோள்களும் இல்லாதவர்கள். போராடும் மனப்பான்மை இல்லாதவர்கள். எதிலுமே நிலையானதொரு ஈர்ப்பு இல்லாதவர்கள். They tend to wander aimlessly and seldom work towards a fixed objective. Thus the sign ascending in the eastern horizon at the time of the birth of an individual tells the qualities with which he is born. He can be trained suitably and given suitable job when he grows up according to his natural inclination

, ராசிகளில் ஆண் ராசிகள், மற்றும் பெண் ராசிகள்

ராசிகளில் ஆண் ராசிகள், மற்றும் பெண் ராசிகள் என்று இரண்டு பிரிவுகள் உண்டு.

1 மேஷம், மிதுனம், சிம்மம்,துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் ஆண் ராசிகள் இந்த ராசியை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்கள் ஆண் லக்கினத்தில் பிறந்தவர்கள்

2 ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம்,மகரம், மீனம் ஆகிய ராசிகள் பெண் ராசிகள் இந்த ராசியை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்கள் பெண் லக்கினத்தில் பிறந்தவர்கள்

ஆண் ராசியில்/லக்கினத்தில் ஆண்தான் பிறக்கவேண்டும்: பெண் ராசியில்/லக்கினத்தில் பெண்தான் பிறக்கவேண்டுமா? அப்படியெல்லாம் இல்லை.

ஆண் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு, அது பெண்ணாக இருந்தாலும் ஆண் தன்மைகள் மிகுந்து இருக்கும். உதாரணம் ஒரு பெரிய அரசியல் தலைவி. மிதுன லக்கினத்தில் பிறந்தவர். பெயரை எல்லாம் சொல்ல விரும்பவில்லை. ஆண்களுக்கு நிகராகச் செயல்படுபவர்.

யாரென்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள் பெண் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பெண் தன்மைகள் மிகுந்திருக்கும். பயந்த சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். உங்கள் மொழியில் சொன்னால் எதிர்மறையான குணங்களை உடையவர்களாக இருப்பார்கள். சில ஆண்களுக்குப் பெண்களின் குணம் இருக்கும். சில பெண்களுக்கு ஆண்களின் குணம் இருக்கும் சில குடும்பங்களின் மனைவி வைத்ததுதான் சட்டமாக இருக்கும். சில வீடுகளின் ஆணாதிக்கம் மிகுந்திருக்கும்

, மாந்தி குளிகன்

யாராலும் சமாளிக்க முடியாத வில்லன் . அவன் பெயர் மாந்தி!

ல்லோருடைய ஜாதகத்திலும் அவன் இருப்பான். யாருக்கும் விதிவிலக்கில்லை. ஆனால் 3,6,10 & 11ஆம் (3rd/6th/10th and 11th houses) வீடுகளில் அவன் இருந்தால், அந்த ஜாதகர்கள் மட்டும் தப்பிப் பிழைப்பார்கள்.

மாந்தி் ஒரு நிழல் கிரகம் (shadow’ planet) குளிகன் என்பவனும் மாந்தி என்பவனும் ஒரே ஆள்தான். ஒரே உபகிரகம்தான். புராணங்கள் மாந்தியை சனியின் புதல்வன் என்கின்றன

ராமாயணத்தில் ஒரு கிளைக் கதையில், மாந்தியைப் பற்றிய செய்தி உள்ளது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். படித்தவர்கள் அறியத்தரலாம். தன் தவவலிமையால் சிவனிடம் வரம் பெற்ற ராவணன், கிரகங்களையே தன்னிடத்திற்கு அழைக்கும் பேறுபெற்று விளங்கினானாம். தன் மகன் இந்திரஜித் பிறக்க இருந்த சமயத்தில், சனியை வரவழைத்த ராவணன். என்னுடைய மகனின் ஜாதகத்தில் நீ பதினொன்றாம் இடத்தில்தான் இருக்க வேண்டும் என்று பணித்தானாம். ஜாதகத்தில், சனிக்கு 11ஆம் வீடு சிறந்த இடம். 12ஆம் வீடுதான் மோசமான இடம். வேறு வழியில்லாமல் சரி என்று ஒப்புக்கொண்ட சனி, அலட்சியத்தாலும், தவறுதலாலும், கவனக்குறைவாலும், அப்படி 11ல் நிற்கும் போது, சனியின் ஒரு கால் 12ஆம் வீட்டின் மேல் இருந்ததாம். கோபமுற்ற ராவணன், தன் நீண்ட வாளால், சனியின் அந்தக் காலை வெட்டிவீழ்த்த, அது ஒன்றாம் வீட்டில் போய் விழுந்ததாம். விழுந்த அந்தக் காலும், அதனுடன் இருந்த சதைப் பகுதியும் சேர்ந்துதான் மாந்தியாக உருவெடுத்ததாம். அதோடு லக்கினத்தில் உயிர் பெற்று எழுந்ததால், ராவணனின் மகன் இந்திரஜித்தின் வாழ்க்கையை, அற்ப ஆயுளிலேயே முடித்துக் கணக்கைத் தீர்த்ததாம். Mandi being on the lagna gave Indrajit, a short span of life!

மாந்தி அல்லது குளிகன், ஜாதகங்களில் இருக்கும் இடத்தைவைத்துப் பலாபலன்கள்:

1ல் மாந்தி இருந்தால்: ஜாதகன் பந்தா’ பேர்வழி. மற்றவர்களை மதிக்கும் குணம் இருக்காது. சிலர் கொடூர சிந்தனை உடையவர்கள். எரிச்சலைத்தரக்கூடியவர்கள். நன்றாகச் சாப்பிடக் கூடியவர்கள். முரட்டுக் குணமுடையவர்களாக இருப்பார்கள்

2ல் மாந்தி இருந்தால்: ஜாதகன் விதண்டாவாதம் செய்யக்கூடியவன். சிலர், வாயைத் திறந்தால், சண்டையில் போய் முடியும். ஜாதகங்களில் வேறு நல்ல அமைப்பு இல்லையென்றால் ஜாதகன் வறுமையில் வாட நேரிடும். சொத்துக்கள் இருக்காது. இருந்தாலும் அவன் கண்ணேதிரேயே கரைந்துவிடும். சிலர் தங்களுடைய வாக்கைக் காப்பாற்றமாட்டார்கள். இந்த அமைப்புள்ள சிலருக்குச் செல்வம் (wealth)என்பது அகராதியில் (Dictionary)மட்டும்தான்.

3ல் மாந்தி இருந்தால்: ஜாதகன் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவன். முன் கோபக்காரன். யாருடனும் இசைந்து போகாதவன் (unsocial). பிறரைக் கவர வேண்டும் என்பதற்காக அசட்டையான வேலைகளைச் செய்யக்கூடியவன். உடன்பிறப்புக்கள் இருக்காது. இருந்தாலும் அவர்களுடன் அவனுக்கு நல்ல உறவு இருக்காது. சிலர் உள்ளூர் நாட்டாமையாக இருப்பார்கள். சிலர் அரசாளுபவர்களின் தொடர்புடனும், மதிப்பைப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

4ல் மாந்தி இருந்தால்: ஒரே வரியில் சொன்னால் – துரதிர்ஷ்டவசமானவன் மற்றும் ஏழ்மையான நிலையில் வாழக்கூடியவன் (unfortunate and poor)

5ல் மாந்தி இருந்தால்: நிலையில்லாதவன். அதாவது நிலையான மனப்பான்மை இல்லாதவன். அடிக்கடி மனதை மாற்றிக்கொள்ளக்கூடியவன். இன்று ஒன்றை வேண்டும் என்பான். நாளையே அதை வேண்டாம் என்பான். சிக்கலான மனநிலை உடையவன். அவனை நம்பி ஒன்றும் செய்ய முடியாது. செல்வம், புகழ் எல்லாம் ஒரு நாள் தொலைந்து போகும். நாத்திக எண்ணம் உடையவன். இறையுணர்வு இருக்காது. சிலர் பெண்ணின்மேல் அதிக ஆசை உடையவர்களாக இருப்பார்கள். பெண்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பார்கள்.

++++++6ல் மாந்தி இருந்தால்: துணிச்சலானவன். உங்கள் மொழியில் சொன்னால் தெனாவெட்டான ஆசாமி. அவனுடைய எதிரிகள் அவனைக் கண்டால் அலறி ஓடுவார்கள் (terror to his foes). மந்திர தந்திரங்களில் ஈடுபாடு உடையவன். சிலர் சமூகத்தில் புகழ் பெற்று விளங்குவார்கள். எந்தப் பெண்ணுமே அவனை விரும்புவாள். அவனிடம் ஈடுபாடுகொள்வாள் (loved by women)

7ல் மாந்தி இருந்தால்: வாய்ச்சண்டை போடக்கூடியவன். வீண் விவாதங்கள் செய்பவன். நமக்கு எதற்கு வீண் வம்பு என்று ஒதுங்காதவன். தவறான நியதிகள், தவறான நியாயங்களை உடையவன். உங்கள் மொழியில் சொன்னால் தனக்கென்று சில சட்டங்களை வைத்திருப்பவன். நன்றி, விசுவாசம் இல்லாதவன். சிலர் பெண்களின் கால்களில் விழுந்து கிடக்க நேரிடும். அவர்களின் தயவிலேயே வாழ்க்கையை ஓட்ட நேரிடும்!

8ல் மாந்தி இருந்தால்: கண்பார்வைக் குறைபாடுகளை உடையவன். சிலருக்கு வயதான காலத்தில் கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படும். எவ்வளவு சாப்பிட்டாலும், பசித்துக் கொண்டே இருக்கும் உடல் அமைப்பைக் கொண்டவன். துக்கமும், துயரமும் அவ்வப்போது தோன்றி வாட்டி எடுக்கும். கல் மனதுக்காரன். ஜாதகனிடம் நல்ல பண்புகள் இருக்காது.

9ல் மாந்தி இருந்தால்: தன்னுடைய குழந்தைகளால் மகிழ்ச்சியை இழக்க நேரிடும். குழந்தைகள் அவனை ‘அம்போ’ அல்லது ’சிவ சம்போ’ என்று கடாசிவிட்டுப் போய் விடுவார்கள். தனிமையில் கிடந்து அல்லாட வேண்டியதிருக்கும். (deserted by children). மறைமுகமாக தீய செயல்களைச் செய்யக்கூடியவர்கள். வாழ்க்கை, பிரச்சினைகளும், கவலைகளும் நிறைந்ததாக இருக்கும்.

10ல் மாந்தி இருந்தால்: ஜாதகன் பலவிதமான கண்ணோட்டங்களை உடையவன். விசித்திரமானவன். சிலருக்கு இறை நம்பிக்கை இருக்கும். வெளிப்படுத்த மாட்டார்கள். சிலருக்கு இறை நம்பிக்கை இருக்காது. சிலர் கஞ்சனாக இருப்பார்கள். வீட்டில் விளையும் மாம்பழத்தை அவனும் சாப்பிடமாட்டான். மற்றவர்களையும் சாப்பிட விடமாட்டான். எல்லாவற்றையும் விற்றுக் காசாக்கிக் கணக்கில் போட்டு வைப்பான். சிலர் எல்லாவற்றையும் தனியாக அனுபவிக்கும் மனப்பான்மை உடையவர்களாக இருப்பார்கள். மொத்தத்தில் மனைவி, மக்கள் என்று சுகமாக இருப்பார்கள்

11ல் மாந்தி இருந்தால்: ஜாதகன் அரசனைப் போல வாழ்வான். நிறையப் பெண்களின் சகவாசம் கிடைக்கும். அவர்களுடன் கூடி மகிழ்வான். சொத்து, சுகம், அதிகாரம், மகிழ்ச்சிஎன்று எதற்கும் குறை இருக்காது . உறவினர்களால் விரும்பப்படுவான். நாட்டமையாக இருப்பான். தலைமைப் பதவிகள் தேடிவரும். அரசு அங்கீகாரங்கள் தேடி வரும்.

12ல் மாந்தி இருந்தால்: ஏழ்மை நிலையில் வாட நேரிடும். பண விரையம் தொடர்ந்து இருக்கும். கட்டுப்படுத்த முடியாத செலவுகளும் தொடர்ந்து வந்து படுத்தி எடுக்கும். சிலர் பாவச் செயலில் ஈடுபடுவார்கள். துரதிர்ஷ்டமானவர்கள். கீழ்த்தரமான பெண்களுடைய சிநேகிதம் கிடைக்கும். அதில் மூழ்கிவிடுவார்கள். சிலருக்கு மூட்டு வலி, மூட்டுக் குறைபாடுகள் உண்டாகும். மொத்தத்தில் இந்த அமைப்பு ஜாதகத்தில் ஒரு மோசமான அமைப்பு.

 

, பணம் சேராது

இரண்டாம் வீட்டில் சனி, ராகு, கேது, மாந்தி ஆகிய நால்வரில் ஒருவர்
இருந்தாலும்/கையில் பணம் சேராது. அது ஓட்டைக் கை. ஓட்டை வாளி

, ருச்சகா யோகம்

ருச்சகா யோகம்: செவ்வாய் – செவ்வாயை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். செவ்வாய் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மகரராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.

ஜாதகன் துணிச்சலானவன்.எதிலும் வெற்றி காண்பவன். சிலர் இரக்கமில்லாமல் அரக்க குணமுடையவர்களாகவும் இருப்பார்கள்

, அனபா யோகம்

அனபா யோகம்

சந்திரன் இருக்கும் வீட்டிலிருந்து அதற்குப் 12ஆம் வீட்டில் (அதாவது சந்திரனுக்குப் பின்புறம் உள்ள ராசியில்) செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ஆகிய ஐவரில் ஒருவர் இருந்தால் அது இந்த யோகம்

பொதுப்பலன்: ஜாதகன் நல்ல தோற்றத்தை உடையவனாக இருப்பான். பெருந்தன்மை உடையவனாக இருப்பான். மென்மையானவனாக இருப்பான் சுயமரியாதை உடையவனாக இருப்பான். வயதான காலத்தில் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொள்வான்

Anapha yoga: If there are planets in the twelfth from the moon, Anapha yoga is caused. A planet other than the Sun occupying the 12th house from the Moon constitutes Anapha yoga. It indicates a person who is of good appearance, generous, polite, self -respecting and moves into spiritual life at a later stage. One born in Anapha Yoga will be eloquent in speech, magnanimous, virtuous, will enjoy food, drink, flowers, robes and females, will be famous, calm in disposition, happy, pleased and will possess a beautiful body.

தனிப் பலன்கள்

1.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் செவ்வாய் இருந்தால்: ஜாதகன் வலிமையானவன். அதிகாரமுள்ளவன். சுயகட்டுப்பாடு உள்ளவன்.

2.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் புதன் இருந்தால்: சிறந்த பேச்சாளனாக இருப்பான். கலைகளின் நுட்பம் தெரிந்தவனாக இருப்பான்.

3.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் குரு இருந்தால்: ஜாதகன் தீவிர சிந்தனை, செயல்களை உடையவனாக இருப்பான். தர்ம சிந்தனை மிக்கவனாக இருப்பான். தன்னுடைய செல்வத்தை அறவழிகளில் பயன்படுத்துவான். அதாவது பல தர்மங்களைச் செய்வான்.

4.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் சுக்கிரன் இருந்தால்: ஜாதகன் பெண்பித்தனாக இருப்பான். அதிகாரத்தில் இருப்பவர்களின் தொடர்பு உள்ளவனாக இருப்பான்

5. சந்திரனுக்குப் பன்னிரெண்டில் சனி இருந்தால்: ஜாதகன் எதிலும் பிடிப்பு இல்லாதவனாக இருப்பான். பற்று இல்லாதவனாக இருப்பான். (ராகு அல்லது கேது இருந்தால்: ஜாதகன் இயற்கையான விஷயங்களுக்கு எதிராக நடப்பவனாக இருப்பான். அவற்றில் பற்று உள்ளவனாக இருப்பான்)

******************************

அனபா யோகம் என்றால் என்ன? சந்திரன் இருக்கும் இடத்தில் அதற்குப் பன்னிரெண்டாம் வீட்டில், அதாவது உங்கள் சந்திர ராசிக்குப் பன்னிரெண்டில், சூரியனைத் தவிர, மற்ற கிரகங்களில் ஒன்று இருந்தால் அதற்கு அனபா யோகம் என்று பெயர். ராகு & கேதுவிற்கு முழு கிரக அந்தஸ்து இல்லை. இருந்தாலும் இந்த யோகத்திற்கு அவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பலன் என்ன?

1 அந்த இடத்தில் செவ்வாய் இருந்தால்: ஆசாமி வலிமையானவன். சுய கட்டுப்பாடு உள்ளவன். விரும்பத்தகாத வேலைகளைச் செய்பவனாகவும், அதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்குத் தலைமை ஏற்பவனாகவும் இருப்பான்

2 அந்த இடத்தில் புதன் இருந்தால்: ஆசாமி எல்லா வித்தைகளும் தெரிந்தவனாகவும், மிகச் சிறந்த பேச்சாளனாகவும் இருப்பான். யாரையும் கவரக்கூடிய வகையில் பேசும் திறமையைப் பெற்றிருப்பான்

3. அந்த இடத்தில் குரு இருந்தால்: ஜாதகன் எதையும் விளையாட்டாக எடுத்துக் கொள்பவன் அல்ல! சீரியசான ஆசாமி. அறவழியில் செல்லக்கூடியவன். தன் செல்வத்தை அல்லது வருமானத்தில் ஒரு பகுதியை தர்ம காரியங்களுக்காகச் செலவிடக்கூடியவன்.

4. அந்த இடத்தில் சுக்கிரன் இருந்தால்: ஆசாமி பெண்களிடத்தில் வழியக்கூடியவன். அல்லது பெண்களிடம் கரையக்கூடியவன். அல்லது உருகக்கூடியவன் எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள். மொத்தத்தில் பெண்பித்தன் (womanizer) ஆனால் அதிகாரமுடையவர்களின் நன் மதிப்பைப் பெற்றவன்

5. அந்த இடத்தில் சனி இருந்தால்: ஜாதகன் தவறான நம்பிக்கைகளுக்கு எதிரானவன். மாயை’களில் இருந்து விடுபடக்கூடியவன். மொத்தத்தில் முற்போக்குவாதி!

6 ராகு அல்லது கேது இருந்தால்: ஆசாமி அதிரடியானவன். யாருக்கும் கட்டுப்படாதவன் எந்த விதிகளுக்கும், ஒழுங்கு முறைகளுக்கும் கட்டுப்படமாட்டான். மொத்ததில் அடங்காதவன்!

மொத்ததில் இந்த யோகம் ஜாதகனுக்கு நல்ல உடல் அமைப்பையும், நல்ல பண்புகளையும், சுய மரியாதையையும் கொடுக்கும்

, புத ஆதித்யா யோகம்

புத ஆதித்யா யோகம்

புதனும், சூரியனும் ஒரு ராசியில் சேர்ந்திருந்தால் அது யோகத்தைக் கொடுக்கும். அந்த யோகத்தின் பெயர் புத ஆதித்ய யோகம்!

பலன்: ஜாதகன் அல்லது ஜாதகிக்கு இந்த யோகம் அதீத திறமைகளைக் கொடுக்கும். எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும். சமூகத்தில்/நட்பு வட்டாரங்களில் மதிப்பையும், மரியாதையையும் கொடுக்கும். This yoga will give lots of talent, success, honour and fame in society.

எல்லோருக்கும் கொடுக்குமா? கொடுக்காது. ஏன் கொடுக்காது?

யோகத்தைக் கொடுக்க வேண்டிய கிரகங்கள் வலுவாக இருந்தால் மட்டுமே யோகத்திற்கான பலன்கள் கிடைக்கும். ஜாதகத்தில் புதனும், சூரியனும், இருவரில் ஒருவர், 6, 8, 12ஆம் வீடுகளில் ஏதாவது ஒன்றிற்கு அதிபதி என்றால், யோக பலன்கள் இருக்காது. அதுபோல அவர்கள் அமரும் வீடு, அவர்களுக்குப் பகை வீடு அல்லது நீச வீடு என்றாலும் பலன் இருக்காது. அவர்களுடன், சனி, ராகு, கேது போன்ற வில்லன்களில் ஒருவர் கூட்டாக இருந்தாலும் யோக பலன் இருக்காது

The Sun & Mercury should be placed well in a chart and also should not themselves be badhakas for the chart

சிம்மம் (சூரியனின் ஆட்சி வீடு) மேஷம் (சூரியனின் உச்ச வீடு) மிதுனம் (புதனின் ஆட்சி வீடு) கன்னி (புதனின் ஆட்சி மற்றும் உச்ச வீடு) ஆகிய 4 வீடுகளில் இந்த யோகம் அமைந்திருந்தால் அது பலனளிக்கும்! மற்ற வீடுகளில்/ராசிகளில் இந்த யோகம் கலவையான (mixed result) பலனைக் கொடுக்கும். அதாவது தண்ணீர் ஊற்றிய பால

மேஷ லக்கினக்காரர்களுக்குப் புதன் 3 & 6ஆம் வீட்டிற்கு அதிபதி. அந்த லக்கினக்காரர்களுக்கு இந்த யோகம் சொல்லும்படியாகப் பலனளிக்காது ரிஷப, சிம்ம, துலா & மகர லக்கினக்காரர்களுக்கு, இந்த யோகம் இருந்தால் பலன் கிடைக்கும். தனுசு லக்கினக்காரர்களுக்கும் பலன் கிடைக்கும்

புதன் சூரியனுடன் 6 பாகைக்குள் சேர்ந்திருந்தால் அஸ்தமனமாகிவிடும். அப்போது இந்த யோகம் கிடைக்காது. அதுபோல புதன் வக்கிரகதியில் இருந்தாலும் இந்த யோகம் இல்லை! சிலர் புதனுக்கு அஸ்தமனம் இல்லை என்பார்கள். அவர்களுக்கு இந்த யோகம் கிடைக்கப் பிரார்த்திப்போம்!

, கஜகேசரி யோகம்

கஜகேசரி யோகம்!

மிகச்சிறந்த யோகங்களில் கஜகேசரி யோகமும் ஒன்று. கஜம் என்றால் யானை, கேசரி என்றால் சிங்கம். யானையின் தோற்றத்தையும், சிங்கத்தின் பலத்தையும் கொடுக்கக்கூடிய யோகம் கஜகேசரி யோகம். பெருந்தன்மை, புத்திசாலித்தனம். கெளரவம், பெயர், புகழ், செல்வாக்கு, சொல்வாக்கு, ஆகியவற்றை ஜாதகனுக்கு இந்த யோகம் கொடுக்கும்.

This yoga gives the native, qualities of a both animals – magnanimous and intelligent as an elephant and majestic as a lion. Such people would earn a lot of name and fame in life. A quality of generosity would also be associated with them. மொத்தம் உள்ள மூன்று சுபக்கிரகங்களில் இரண்டு சுபக்கிரகங்கள் – குரு’வும், சந்திரனும் சம்பந்தப்பட்டு ஏற்படுவதால் இந்த யோகத்திற்கு அந்தப் பெயர் வழங்கப்பட்டிருக்கலாம். இந்த யோகம் எப்போது உண்டாகும்? குரு பகவானும், சந்திரனும் ஒருவருடைய ஜாதகத்தில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் 1, 4, 7,10 ஆகிய கேந்திர வீடுகளில் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

Gaja Kesari Yoga is caused by Moon and Jupiter coming together in a chart by being in Kendras (1st, 4th, 7th, or 10th) from each other. இந்த யோகம் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரிப் பலன் உண்டா? இல்லை! அந்த இரு கிரகங்களும் ஜாதகத்தில் அமைந்திருக்கும் தன்மையைப் பொறுத்துப் பலன் மாறுபடும்.

அவைகள் நீசம் பெறாமலும், பகை வீட்டில் இல்லாமலும், வக்கிரம் பெறாமலும், அஸ்தமனமாகாமலும், தீய கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வை பெறாமலும் இருக்க வேண்டும். அதோடு அவைகளில் இரண்டில் ஒன்று ஜாதகத்தில் 6, 8,12 ஆம் வீடுகளில் உட்கார்ந்திருக்கக்கூடாது

This yoga depends on the strength, position and house lordship of the two planets involved – Moon and Jupiter. The yoga would also be best shown in life if both these planets are in their exaltation sign and are at an angle not just from each other but from Lagna as well. Neechabhanga Chandra and Guru would be considered good. The two planets would need to be benefic in the charts and suitably disposed to the lord of Lagna as well. They themselves should be free from any negative aspect, particularly Rahu and Saturn should not be associated with Moon. This yoga would not work if Jupiter is in regression – as benefic planets become considerably weaker when they are retrograde. Moon and Jupiter should not be in neech awastha or in combust state. If that is the case, the effects of this yoga are nullified and the person would lead a fairly ordinary life.

அப்படி இருந்தால் என்ன அளவில் (ratio) பலன்? அப்படி இருந்தால் என்ன அளவில் (ratio) பலன் என்பதைத் தருமியிடம்தான் கேட்கவேண்டும்! அவர்தான் திருவிளையாடல் தருமி! எப்போது பலன் கிடைக்கும்? குரு மற்றும் சந்திரனின் மகா தசைகளிலும், புத்திகளிலும் பலன்கள் கிடைக்கும்.

, சந்திரமங்கள யோகம்

யோகங்கள்: ”சந்திரமங்கள யோகம்” ”சந்திரமங்கள யோகம்” ஒரு ராசியில் சந்திரனும், செவ்வாயும் கூட்டணி போட்டு ஒன்றாக இருந்தால் நன்றாகக் கவனியுங்கள் – ஒன்றாக இருந்தால் அது சந்திரமங்கள யோகம் எனப்படும். சிலர் அதைச் ”சசிமங்கள” யோகம் என்றும் சொல்வார்கள். இரண்டும் ஒன்றுதான் If Mars conjoins the Moon, this yoga is formed Sasi Mangala Yoga – When mars and moon placed in same house. The natives finance never gets drain. He will get finance help when ever he needs.

யோகத்தின் பலன் என்ன? இந்த யோகத்திற்குப் பலனும் உண்டு. பக்க விளைவும் உண்டு. பலன் எந்த அளவிற்குக் கிடைக்குமோ, அந்த அளவிற்குப் பக்க விளைவும் உண்டு. ஜாதகனின் நிதி நிலைமை என்றும் வற்றாமல் இருக்கும். எந்த வழியிலாவது பண வரவு இருக்கும். ஜாதகன் வசதியானவன். செல்வந்தன். அதே நேரத்தில் மனகாரகன் சந்திரனுடன், தீய கிரகமான செவ்வாய் சேருவதால் ஜாதகனுக்குப் பலவிதமான மனப்போராட்டங்களும் கூடவே இருக்கும். அதுதான் பக்க விளைவு. That is called as the side effects of this yoga Chandra Mangala Yoga acts as a powerful factor in establishing ones financial worth and at the same time the native will suffer with mental worries The combination is good if it occurs in the 2nd, 9th, 10th or 11th house.

இது உபரிச் செய்தி: சந்திரன் ரிஷபத்தில் இருந்து (அங்கே அவர் உச்சம்) செவ்வாய் விருச்சிகத்தில் இருந்தாலும் (அது அவருக்கு ஆட்சி வீடு) அதுபோல மகரத்தில் செவ்வாய் இருந்து (அங்கே அவர் உச்சம்) கடகத்தில் சந்திரன் இருந்தாலும் (அது அவருக்கு ஆட்சி வீடு) அந்த அமைப்பு உன்னதமானது. இந்த அமைப்பில் சேர்க்கையில் அல்லாமல் பார்வையில் இந்த இரண்டு கிரகங்களும் ஜாதகனுக்கு மிக நல்ல பலன்களைக் கொடுக்கும். ஜாதகனின் நிதி நிலைமை வற்றாமல் ஊற்றாக இருக்கும்! அதாவது சசி மங்கள யோகத்திற்கு ஈடான பலன் அதில் உண்டு! The Moon in Taurus and Mars in Scorpio – The Moon in Cancer and Mars in Capricorn are excellent positions for the native of a horoscope!

சந்திரனும், செவ்வாயும் ஒன்றாகச் சேர்ந்து எந்த வீட்டில் இருந்தாலும் அது சந்திரமங்கள யோகம் தான். சந்திரன் சாத்வீகமான கிரகம். அதனுடன் சேரும் தீய கிரகம் கீழ்க்கண்ட பாதிப்புக்களை உண்டாக்கும்:

1. ஜாதகனின் மனநிலையைப் பாதிக்கும்.

2. குணத்தை மாற்றும். உணர்ச்சிவசப்படச் செய்யும். தன் நிலையை மறக்க வைக்கும். செவ்வாய் மனதில் ஒருவித அலையை ஏற்படுத்தும் Mars will create the tide within the mind, and influence the mental and emotional aptitude. Fighting mind and spirit, self protective, desire to rule and influence others, irritated and aggressive

3. ஜாதகனின் இந்தக் குண மாற்றங்களால், அவனுடைய மனைவி, குடும்பம், மற்றும் உறவுகள் எல்லாமும் பாதிப்படையும். சந்திரன் சுபக்கிரகம். நல்லவற்றை வழங்கக்கூடிய கிரகம். நான்காம் இடத்திற்குக் காரகன். செவ்வாயும் ஒருவிதத்தில் வழங்கக்கூடியவன். நான்காம் இடத்திற்கான, இடம், சொத்துக்களை (Landed Properties) வழங்கக்கூடியவன் அவன்தான் சாமிகளா! இருவருமே வழங்கக்கூடிய வள்ளல்கள். ஆகவே ஜாதகனுக்குச் செல்வத்தை நிச்சயம் வழங்குவார்கள். அதே நேரத்தில் சில தீமைகளும், அவர்களின் சேர்க்கையால் உண்டாகும். அதுதான் அந்தப் பக்க விளைவு (side effects) Chandra Mangala Yoga gives wealth and also troubles to the native of the horoscope! எப்போது வழங்குவார்கள்? இருவரும் தங்கள் தசை/புத்திகளில்/அந்தர தசைகளில் வழங்குவார்கள்

அந்த யோகமும், பாதிப்பும் எந்த அளவிற்கு இருக்கும்? இருவரும் அமரும் வீட்டைப் பொறுத்துப் பலன்களும் வித்தியாசப்படும்! The main difference lies in the house where chandra and mangala are placed. There are different infleunces on the houses: 1,3,5,6,8,9,10 ஆம் வீடுகளில் செவ்வாய்க்கு வலிமை அதிகம் 2,4,7,11, 12ஆம் வீடுகளில் சந்திரனுக்கு வலிமை அதிகம் ஆகவே அந்த இரண்டு கிரகங்கள் சேரும்போது இயற்கையாகவே அது எந்த வீடோ, அந்த வீட்டை-அதாவது முதல் வரியில் குறிப்பிட்டுள்ள வீடுகளில் செவ்வாயின் அதிகாரம் மேலோங்கி இருக்கும். இரண்டாவது வரியில் குறிப்பிட்டுள்ள வீடுகளில் சந்திரனின் அதிகாரம் மிகுந்து இருக்கும். சந்திரனின் அதிகாரம் உள்ள வீட்டை உடைய ஜாதகனுக்குத் தீய பலன்கள் குறைவாக இருக்கும். இது பொது விதி! உச்சம், நீசம், வக்கிரம், அஸ்தமனம், அஷ்டகவர்க்கப் பரல்கள் 6, 8, 12ஆம் இடங்கள் ஆகியவற்றை வைத்துப் பலன்கள் மாறுபடும். ஆகவே பொறுமையாக அலசுங்கள். அலசுகிற வேகத்தில் துணியைக் கிழித்து விடாதீர்கள்:-)))))) Therefore, each house will decide which planet among two, Moon or Mars dominates the Yoga. IF Moon is stronger, satvic qualities dominate the Yoga, and bad shades of Yogas are lesser. Mars turns calms down due to the blessings of Benefic Moon If Mars dominates the Yoga, Mars is very angry and can create serious problems (apart from other good effects given by this Yoga)

வீடுகள் வாரியாகப் பலன்கள் கீழே கொடுக்கப்பாட்டுள்ளன! கீழே உள்ளது அனைத்தும் பொதுப் பலன்கள்! கீழே உள்ளது அனைத்தும் பொதுப் பலன்கள்! கீழே உள்ளது அனைத்தும் பொதுப் பலன்கள்!

1. லக்கினத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால், அது மேஷ லக்கினம், விருச்சிக லக்கினமாக இருந்தால் அல்லது கடக லக்கினமாக இருந்தால் நல்லது. ஜாதகனுக்கு எல்லாம் நன்மையே. இல்லையென்றால் ஜாதகனுக்கு சுகக் கேடு. ஆரோக்கியக் கேடு.

2. இரண்டாம் வீட்டில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால், ஜாதகனின் வாழ்க்கை வளமாகவும் செல்வம் மிக்கதாகவும் இருக்கும். அதோடு இதய நோய் உடையவனாகவும், அடிக்கடி விபத்துக்களில் சிக்கிக் கொள்பவனாகவும் இருப்பான்.

3. மூன்றாம் வீட்டில் இந்த அமைப்பு இருந்தால், ஜாதகன் அம்சமாக இருப்பான். அம்சம் என்றால் என்ன வென்று தெரியுமல்லவா? எதையும் ரசிப்பவனாக இருப்பான். வாழ்க்கை ரசனைகள் மிகுந்து இருக்கும். அதே நேரத்தில் மனதில் கவலைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் குறைவிருக்காது. சிலரது (நன்றாகக் கவனிக்கவும்) சிலர் தனது துணையை இளம் வயதிலேயே பறிகொடுக்க நேரிடும்!

4. நான்காம் இடத்தில் இந்த அமைப்பு இருந்தால், ஜாதகன் மிகுந்த அதிர்ஷ்டசாலி! ஜாதகனுக்கு எதையும் மோதிப் பார்க்கும் குணம் இருக்காது. வருவது வரட்டும் என்று மேலோட்டமாக இருப்பான். வலிமையான மனம் உடையவனாக இருப்பான். இளைய உடன் பிறப்புக்களுடனான உறவு சுகமாக இருக்காது!

5. ஐந்தாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால், ஜாதகனைப் பரபரப்பான ஆசாமியாகவும், தகறாறு செய்யும் மனப்பான்மையுடையவனாகவும் மாற்றிவிடும். ஆனால் ஜாதகன் அதிகாரமுள்ளவனாக இருப்பான்.

6. ஆறாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு, ஜாதகனுக்குப் பலவிதமான பிரச்சினைகளைக் கொடுக்கும். எதிரிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். சிலருக்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும்.

7. ஏழாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு செல்வம், புகழ் இரண்டையும் கொடுக்கும். அதே நேரத்தில் திருமண வாழ்வில் கசப்பை உண்டாக்கி விடும். கசப்பு எந்த அளவு வேண்டுமென்றாலும் இருக்கலாம். உறவுகளை ஓரங்கட்டிவிடும். சிலருக்கு இதயநோய்கள் உண்டாகும். ஒரு ஆறுதல் ஜாதகன் எதிரிகளைத் துவம்சம் செய்து விடுவான். சிலருக்கு இரண்டு தடவைகள் திருமணம் நடக்கலாம்.

8. எட்டாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு மிகவும் மோசமானது. அழிவை ஏற்படுத்தக் கூடியது. திருமண வாழ்வில் முறிவை ஏற்படுத்தும். அல்லது கணவன்/மனைவி இருவரில் ஒருவரைக் காலி செய்துவிடும்.சிலருக்கு முதல் திருமணம் ரத்தாகி, இரண்டாவது திருமணம் நடக்கலாம். சிலருக்கு அதீதமான பணத்தைக் கொடுக்கும். அதே நேரத்தில் ஆயுளைக் குறைத்து விடும் அபாயமும் உண்டு!

9. ஒன்பதாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு சக்தி, அதிகாரம், வலிமை, வளமை என்று எல்லாவற்றையும் கொடுக்கும், அதே நேரத்தில் ஜாதகனின் ஆயுளைக் குறைத்து விடும் அபாயமும் உண்டு! அல்லது ஜாதகன் விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயமும் உண்டு!

10. பத்தாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால் ஜாதகனுக்கு அதீத வருமானம் உடைய வேலை அல்லது தொழில் அமையும். சிலருக்கு உடல் வலிமை இருக்கும். மன வலிமை இருக்காது.

11. பதினொன்றாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால் ஜாதகனுக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். சமூக சேவையில் ஜாதகன் பெயர் எடுப்பான். ”காசுமேல காசு வந்து கொட்டுகிற நேரம் இது; ராஜலக்‌ஷ்மி வந்து கதவைத் தட்டுகிற நேரம் இது” என்று பாடிக் கொண்டிருப்பான். பணம் கொட்டும். சிலரின் ஜாதகத்தில் செவ்வாய்க்கு இந்த இடம் உகந்த இடம் இல்லையென்றால், ஜாதகன் ஆர்வக்குறைவாக இருப்பான். ஆனால் பணம் மட்டும் மழையாகக் கொட்டும்!

12. பன்னிரெண்டாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால் தீமைகளே அதிகம். இடம் என்ன சாதாரணமான இடமா என்ன? விரைய ஸ்தானம் (House of Loss) உடல் உபத்திரவம், மன உபத்திரவம், கடன், அதிர்ஷ்டமின்மை, உறவுகளின் இழப்பு, நண்பர்களின் பிரிவு என்று எல்லாமுமே படுத்துவதாக இருக்கும். கவலைப் படாதீர்கள், இந்த அமைப்பு உங்களுக்கு இருந்தால், நீங்கள் ஞானியாகி விடலாம். ஞானியாகிவிட்டால் அதைவிட மேன்மையான நிலை எதுவும் இல்லை!

, பரிவர்த்தனை யோகம்

பரிவர்த்தனை யோகம் இரண்டு கிரகங்கள் இடம் மாறி ஒன்றின் வீட்டில் மற்றொன்று அமர்வது (interchange of places) பரிவர்த்தனை யோகம் ஆகும்! "Parivartthanai means Planet-A occupies the sign of Planet-B while simultaneously Planet-B occupies the sign of Planet-A. Example: Moon occupies Jupiters (குரு) house and Jupiter (குரு) occupies moons house

இந்த யோகத்தால் இடம் மாறி அமர்ந்த கிரகங்களின் சக்தியும்/வலிமையும் அதிகமாகும்.அதேபோல இடம் மாறிய ராசிகளின் சக்தியும், வலிமையும் அதிகமாகும். அந்தப் பரிவர்த்தனை ஜாதகனின் வாழ்க்கையில் பல வெற்றிகள் ஏற்பட வழிவகுக்கும். Parivartthanai yoga will always increase the power of the two houses involved. It will also increase the power of the two graha involved. Increasing the power of these two bhava and these two graha may be helpful for the success of the native. அது பொது விதி. சில பரிவர்த்தனைகளால் தீமைகள் அதிகமாக ஏற்படும் நிலைமையும் உண்டாகும் எப்படி? வாருங்கள். அதைப்பார்ப்போம்.

அந்த மாற்றத்திற்குக் காரணமான கிரகங்கள் தீய கிரகங்களாக இருந்தாலும், மாறிய இடங்கள் தீய இடங்களாக (inimical places) இருந்தாலும், அதாவது 6, 8, 12ஆம் வீடுகளாக இருந்தாலும், ஜாதகனுக்குத் தீய பலன்கள்தான் அதிகமாகக் கிடைக்கும் ஆகவே பரிவர்த்தனை யோகம் உள்ளது என்றவுடன், யாரும் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள வேண்டாம். If the bhava or the graha are inauspicious, the parivartthanai yoga may increase negative results.

பரிவத்தனைக்கு உள்ளான கிரகங்கள், சுபக்கிரகங்களாக இருந்தால், (benefics) ஜாதகனுக்கு அதீத நன்மைகள் கிடைக்கும். பரிவத்தனைக்கு உள்ளான கிரகங்கள், அசுபக்கிரகங்களாக இருந்தால், (melefics) ஜாதகன் அதீத தீமைகளையே சந்திக்க நேரிடும். If the graha involved are natural benefics; the benefits will be more for which those grahas are concerned. If the exchanged graha are natural malefics; results may be more difficult than the graha might separately produce.

இந்தப் பரிவர்த்தனை யோகத்தின் மூன்று விதமான உட்பிரிவுகள்.

1.தைன்ய பரிவர்த்தனை. தீய இடங்களான 6,8, 12ஆம் வீடுகளுக்கு ஆட்சிக் கிரகம் (Ruler of 6,8, or 12th houses) பரிவர்த்தனை பெற்றால், பரிவர்த்தனையான அடுத்த கிரகம் பாதிப்பிற்கு உள்ளாகும். This parivarththanai leads to a wicked nature, persistent trouble from opponents and ill health. The dushthana lord will be strengthened by its interaction with the other non-dushthana partner.

2. கஹல பரிவர்த்தனை! மூன்றாம் இடத்து அதிபதி பரிவர்த்தனைக்கு உள்ளாவது. பரிவர்த்தனைக்கு உள்ளாகும் கிரகம், 1,2,4,5,7,9,10, 11 ஆம் இடத்து அதிபதியானால் இந்த யோகம் நன்மை பயக்கும். மூன்றாம் இட அதிபதியின் துணிச்சலை மாறி அமரும் கிரகம் பெறும். தன்னுடைய செயல்களை நிறைவேற்றிக் கொள்ளும் துணிச்சல் ஜாதகனுக்குக் கிடைக்கும். Kahala yoga will energize the talking, scheming, competing mind to go out and get stuff done.

3. மஹா பரிவர்த்தனை யோகம்.Maha Parivartamsha Yoga 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆம் இடத்து அதிபதிகளில் எவரேனும் இருவர் அல்லது இருவருக்கு மேற்பட்டவர்கள் இடம் மாறி அமரும்போது இந்த யோகம் உண்டாகும். ஜாதகனுக்கு, சொத்து, சுகம், அஸ்தஸ்து, மரியாதை, உடல் நலம், பதவி, அதிகாரம் என்று சம்பந்தப் பட்ட வீடுகளுக்கு ஏற்பக் கிடைக்கும். When the lords of 1, 2, 4, 5, 7, 9, 10, or 11 get exchange of signs, then it is called as Maha Parivarththanai Yoga Result: This yoga promises wealth, status, and physical enjoyments, plus beneficial influences from the houses involved.

பரிவர்த்தனைக்கும், பார்வைக்கும் உள்ள வேறுபாடு. தீய கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்க்கும்போது தீமைகள் அதிகமாகும். நல்ல கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்க்கும்போது நன்மைகள் அதிகமாகும். உதாரணத்திற்கு சனியையும், செவ்வாயையும் எடுத்துக் கொள்வோம். இரண்டும், 180 பாகைகள், 90/270 பாகைகளில் (4/10 கோணங்களில்) ஒன்றை ஒன்று பார்க்கும். அதாவது ஜதகத்தில் ஒன்றின் பார்வையில் மற்றொன்று இருக்கும். அதனால் ஜாதகனுக்கு, அதீத கோப உணர்வும், மூர்க்கத்தனமும் இருக்கும். ஜாதகன் தன்னுடைய வாழ்வின் பாதி நன்மைகளை அந்தக் குணத்தாலாயே இழக்க நேரிடும். ஆனால் அதே நேரத்தில் சனியும், செவ்வாயும் ஒன்றிற்கொன்று பரிவர்த்தனையாகி நின்றால் சனியால் ஒரு ஒழுங்குமுறையும், செவ்வாயால் சாதிக்கும் தன்மையும் உண்டாகும்.

2ஆம் அதிபதியும், 11ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகனுக்குப் பணம் கொட்டும். செல்வங்கள் சேரும். பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று குழம்பும் நிலை ஏற்படும். வாழ்க்கை, வசதிகளும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும். 6ஆம் அதிபதியும், 11ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் தன் சொத்துக்களை, செல்வங்களை இழக்க நேரிடும். 2ஆம் அதிபதியும், 9ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் மகிழ்ச்சி உள்ளவனாகவும், அதிர்ஷ்டம் உள்ளவனாகவும் இருப்பான். சொத்துக்களை உடையவனாகவும் இருப்பான். வேதங்களைக் கற்றவனாகவும், அதிபுத்திசாலியாகவும் விளங்குவான் 1ஆம் அதிபதியும், 5ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் புகழ்பெற்று விளங்குவான். மகிழ்ச்சி நிரம்பியவனாக இருப்பான். 1ஆம் அதிபதியும், 10ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் அரசில், அல்லது அரசியலில், உயர் பதவியைப் பெற்று உயர்வான நிலைக்கு வருவான். 9ஆம் அதிபதியும், 10ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகனுக்கு அந்தஸ்து, அதிகாரம், புகழ், என்று எல்லாமும் தேடிவரும். மிகவும் உயர்ந்த அமைப்பு இது. இதற்கு தர்ம கர்மாதிபதி யோகம் என்கின்ற பெயரும் உண்டு! This type of parivarththanai yoga will confer high position, reputation, fameand power. Shukra-Kuja exchange If Venus and Mars exchange their divisions, the female will go after other males. If the Moon be simultaneously in the 7th house, she will join others with consent of her husband. (எச்சரிக்கை: இது பொது விதி) அக்கிரமம். பெண்களுக்கு மட்டும்தான் மேலே குறிப்பிட்டுள்ள விதியா? ஆண்களுக்கு இல்லையா? எந்த விதிகளும் இல்லாமலேயே, ஆண்களில் பலர், காமுகர்கள்தான்:-))))) பல கடுமையான நோய்கள் வந்துவிட்டால் (இருதய நோய்கள், மார்புப்புற்று நோய்கள்) இந்தப் பரிவர்த்தனை யோகம் இருந்தால், அவர்களுக்கு வந்த வேகத்தில் அந்த நோய்கள் குணமாகிவிடும்.

இந்தப் பரிவர்த்தனை யோகத்திற்கு உதாரணமாகச் சொல்லப்படும் ஜாதகம் மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்களின் ஜாதகம். அதை உங்களுக்கு அறியத்தந்திருக்கிறேன். கீழே உள்ளது. அவர்களுடைய ஜாதகத்தில் ஆறு கிரகங்கள் பரிவர்த்தனையாகி உள்ளன. ஒரு ஜோடி பரிவர்த்தனை என்பது இரண்டு உச்சங்களுக்குச் சமம். 3ஜோடி பரிவர்த்தனை என்பது ஆறு கிரகங்கள் உச்சமானதற்குச் சமம் என்று எடுத்துக்கொள்ளலாம். இந்த பரிவர்த்தனைகளால் அவர் பல நன்மைகளையும் பெற்றார். பல தீமைகளையும் பெற்றார். இளம் வயதில் விதவையானதும், இளம் வயது மகனை, விமான விபத்தில் பறி கொடுத்ததும் (1980) தீமைகளில் முக்கியமானவை Indira GANDHI, born on November 19, 1917 at 11:11 PM in Allahabad

1 & 7ஆம் வீடுகளில் சந்திரனும், சனியும் பரிவர்த்தனை. 2 & 5ஆம் வீடுகளில் சூரியனும், செவ்வாயும் பரிவர்த்தனை. 6 & 11ஆம் வீடுகளில் குருவும், சுக்கிரனும் பரிவர்த்தனை.

 

, சஷ்ய யோகம்

<div align="justify">
<p>சஷ்ய யோகம்: சனி – சனீஷ்வரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சனீஷ்வரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று துலா இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.</p>
<p> வகுப்பறை புத்திசிகாமணி!: ”சார், சனி நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?” “இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!”</p>
<p>என்ன பலன்? ஜாதகன் சக்தியுள்ளவன். வலிமையுள்ளவன். எல்லாவிதத்திலும் வலிமையுள்ளவன். கண்டிப்பானவன். எதற்கும் வளைந்து கொடுக்காமல் தன் கொள்கைகளில், செயல்களில் கண்டிப்பாக இருப்பவன். அதிகாரம் மிக்கவன். தன் குடும்பத்தில், தொழிலில், செயல்களில் அதிகாரம் மிக்கவன் கீழே உள்ளது </p>
<p> Shasya yoga: Saturn in its own sign or in exaltation, and in a kendra house – powerful, strict, position of authority.</p>
</div>

, மாளவ்ய யோகம்

மாளவ்ய யோகம்

சுக்கிரன் – சுக்கிரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சுக்கிரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மீன ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.

வகுப்பறை புத்திசிகாமணி!: ”சார், சுக்கிரன் நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?” “இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!”

என்ன பலன்? ஜாதகன் வாழ்க்கையை மிகவும் ரசித்து வாழ்பவன். நல்ல மனைவி அமைவாள். பிரச்சினை இல்லாத மனைவி அமைவாள். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும் தர்ம, நியாயங்களில் ஜாதகன் பற்றுடையவனாக இருப்பான். உங்கள் மொழியில் சொன்னால் அவற்றில் பிடிப்பு உடையவானாக இருப்பான். செல்வமுடையவனாக, வசதிகள் உடையவனாக இருப்பான். வேறு அமைப்புக்களால் நல்ல மனைவி அமையாவிட்டாலும், ஜாதகன் வாழ்க்கையை, ரசித்து வாழ்பவனாக இருப்பான். Marriage is only a part of the life.Not the whole life Please keep that in your mind! மொத்தத்தில் ஜாதகன் ரசனை உள்ளவன். அவனை எல்லோரும் விரும்புகிறார்களோ இல்லையோ, அவன் எல்லோரையும் விரும்புவான்! கீழே உள்ளது நமது தூத்துக்குடி முருகா’ விற்காக சுருக்கமாக ஆங்கிலத்தில்: Malavaya yoga: Venus in its own sign or in exaltation, and in a kendra house – wealthy, loves life, sometimes self-indulgent, good marriage, strong sense of justice.

, ஹம்ஸ யோகம்

ஹம்ஸ யோகம்: குரு – குரு பகவானை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். குரு தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கடக ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.

வகுப்பறை புத்திசிகாமணி!: ”சார், குரு நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?” “இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!”

என்ன பலன்? ஜாதகன் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக இருப்பான். வாழ்க்கையின் எல்லா நலன்களும் அவனைத் தேடி வரும். இறை நம்பிக்கை உள்ளவனாக இருப்பான்.

Hamsa yoga: Jupiter in its own sign or in exaltation, and in a kendra house – religious, very fortunate.

, பத்ரா யோகம்

பத்ரா யோகம்: புதன் – புதனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். புதன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கன்னிராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.

வகுப்பறை புத்திசிகாமணி!: ”சார், புதன் நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?” “இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!”

என்ன பலன்? ஜாதகன் அதி புத்திசாலியாக இருப்பான். அறிவுஜீவியாக இருப்பான். அறிவு ஊற்றெடுக்கும்! அதிகம் கற்றவனாக இருப்பான்.கல்வியில் அல்லது சொந்த அனுபவத்தில்! வேறு அமைப்புக்களால் முறையான கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைக்காமல் போயிருந்தாலும் தனது சொந்த முயற்சியால் பல புத்தகங்களையும் கற்றுத் தேறியிருப்பான். செல்வந்தனாக இருப்பான். அல்லது தன் முயற்சியால் செல்வத்தைத் தேடிப் பிடிப்பான். கீழே உள்ளது நமது தூத்துக்குடி முருகா’ விற்காக சுருக்கமாக ஆங்கிலத்தில்: Bhadra yoga: Mercury in its own sign or in exaltation, and in a kendra house – intellectual, learned, rich.

, வஞ்சன சோர பீதி யோகம்

வஞ்சன சோர பீதி யோகம்! பயந்து விடாதீர்கள். எல்லாம் வடமொழிச் சொற்கள். Vanchana Chora Bheethi Yoga vañchana — cheating chora – thief bheethi – fear ஏமாற்றுவேலைகளுக்கு ஆளாகிவிடுவோமோ, இருப்பதை திருட்டுக் கொடுத்துவிடுவோமோ என்று ஜாதகன் ஒருவித பய உணர்வுடனேயே வாழும் நிலைமை இருப்பதைக் குறிக்கும் யோகம் இந்த யோகம்.

The combinations pertaining to this Yoga are found in almost all horoscopes, so that we are all guilty of cheating and being cheated one another in some form or the other. It is a tragedy of our social life that a merchant minting millions at the cost of the poor is left scot-free while the poor, committing theft in the face of poverty and want, are booked by law. Cheating is practiced in a variety of ways. Fertile brains find countless methods to cheat their associates. The merchants have various ways of cheating their clients. The lawyer is equally successful. The medical man commands many ways to defraud his patients.

லக்கின அதிபதி ராகு, சனி அல்லது கேதுவோடு சேர்ந்து ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் இந்த அவயோகம் உண்டு! உண்டு! உண்டு! அதேபோல லக்கினத்தில் தீய கிரகம் இருந்து கேந்திரத்தில் மாந்தி இருந்தாலும் அல்லது மாந்தி, கேந்திர அதிபர்களுடன் கூட்டணி போட்டு இருந்தாலும் ஜாதகனுக்கு இந்த அவயோகம் இருக்கும் பலன்: ஜாதகன் எப்பொதுமே ஒருவித பய உணர்வுடன் இருப்பான்.

The Lagna lord is with Rahu, Saturn or Ketu Result : The person will be constantly suspicious of people around him, afraid of being taken advantage of, swindled or stolen from. The native will always entertain feelings of suspicion towards others around him. He is afraid of being cheated, swindled and robbed. அதே போல ஜாதகன் பல வழிகளிலும் தன் செல்வத்தை இழந்தவனாகவும் இருப்பான். In all these cases, the person will not only have fears from cheats, rogues and thieves but he will also have huge material losses.

, குஹு யோகம்

அவயோகம் குஹு யோகம்: 4ஆம் வீட்டு அதிபதி 6,8,12ஆம் வீடுகள் ஒன்றில் அமர்ந்திருந்தால் அது இந்த யோகத்தைக் குறிக்கும் பலன்: தாய் அல்லது தாயின் அரவணைப்பு, வாழ்க்கை வசதிகள், நட்புக்கள் மற்றும் உறவுகள், மகிழ்ச்சி என்று நான்காம் வீடு சம்பந்தப்பட்ட பல நல்ல விஷயங்களை ஜாதகன் இழக்க நேரிடும். அல்லது பறிகொடுக்க நேரிடும். சிலர் நிரந்தரமாகத் தங்குவதற்கு ஒரு இடம் அல்லது ஒரு வீடு இன்றி அவதிப்பட நேரிடும். இருப்பதையும் இழந்து அவதிப்பட நேரிடும். கீழ்த்தரமான பெண்களுடன் சிநேகம் வைத்துக் கொண்டு சிலர் தங்களுடைய மரியாதையை இழந்து அவதிப்பட நேரிடும். பொதுவாகச் சொன்னால் ஜாதகனுக்குத் தேவையானதும், அவன் எதிர்பார்ப்பதும் கிடைக்காமல் போய்விடும் Lacking something needed or expected!

, துஷ்கிரிதியோகம்

அவயோகம் துஷ்கிரிதியோகம்: 7ஆம் வீட்டு அதிபதி 6,8,12ஆம் வீடுகள் ஒன்றில் அமர்ந்திருந்தால் அது இந்த யோகத்தைக் குறிக்கும். பலன்: மனைவியை விட்டு பிரிந்து வாழ நேரிடும். சிலர் அடுத்தவருடைய மனைவியின் மேல் ஆசைவைத்து, தகாத செயல்களைச் செய்து கொண்டிருப்பார்கள். ஊர் சுற்றிகள் பலராலும் ஒதுக்கித் தள்ளப்படும் நிலைக்கு ஆளாக நேரிடும். பால்வினை நோய்கள் உண்டாகும். இவற்றின் விளைவாக உறவுகளின் வெறுப்பிற்கு ஆளாக நேரிடுவதுடன் வாழ்க்கை மகிழ்ச்சி இல்லாததாக மாறிவிடும்.

, ராஜயோகம்

யோகா எனும் சொல் யுஜ் என்னும் வடமொழிச் சொல்லின் விரிவாக்கம். யுஜ் என்பதற்கு கூட்டு (unite) – கூட்டாக என்னும் பொருள் வரும். ராஜா என்பதற்கு அரசன் என்று பொருள். ராஜயோகம் என்றால் அரசனுக்கு நிகரான யோகம் என்று பொருள் ராஜயோகம் என்பதற்கு, ஜாதகனுக்கு அந்தஸ்தைத் தரக்கூடிய கிரகங்களின் கூட்டணி என்று எடுத்துக் கொள்ளலாம். அதற்கு எதிர் மாறாக அவ யோகம், அரிஷ்ட யோகம், தரித்திர யோகம் என்று மூன்று விதமான – ஜாதகனுக்கு தீமையைச் செய்யக்கூடிய யோகங்களும் உண்டு! அவ என்பது கெட்டது (Ava means bad) அரிஷ்டம் என்பது நோயைக் குறிப்பது (Arishta means one causing diseases) தரித்திரம் என்பது வறுமையைக் குறிப்பது (Daridra means poverty) ராஜயோகங்களிலும் மூன்று பிரிவுகள் உள்ளன

1. தன ராஜயோகம் (yogas for wealth)

2. கீர்த்தி ராஜயோகம் (yogas for name and fame)

3. சன்யாச ராஜயோகம் (reigning as a religious head) சன்யாசத்தில் ராஜயோகமா…ஹி.ஹி என்று சிரிக்க வேண்டாம். அரசர்கள் வந்து வணங்கி விட்டுப் போகும் அளவிற்கு சித்தியை பெற்ற சன்யாசிகள் உண்டு. இருந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு ரமண மஹரிஷியைச் சொல்லலாம் அவரை, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் பலமுறை தமிழகத்திற்கு வந்து வணங்கிவிட்டுப்போயிருக்கிறார். அதை நினைவில் வையுங்கள் ——————————————————

1. தன ராஜயோகம் (yogas for wealth) 2,6,10, & 11ம் வீட்டதிபதிகளின் சேர்க்கை அல்லது பரிவர்த்தனையால் இந்த யோகம் ஏற்படும்

2. கீர்த்தி ராஜயோகம் (yogas for name and fame) இது திரிகோண அதிபதிகளூம், கேந்திர அதிபதிகளும் சேர்வதால் உண்டாகும்

3. சன்யாச ராஜயோகம் (reigning as a religious head) 9, 12, 10 and 5ஆம் அதிபதிகள் சேர்க்கை அல்லது பார்வைகளால் இந்த யோகத்தைக் கொடுப்பார்கள் பணம், புகழ், மதிப்பு, மரியாதை & செல்வாக்கு போன்றவைகள் தடையில்லாமல் ஜாதகனுக்குக் கிடைக்க இந்த யோகங்கள் அவசியம். இந்த யோகம், ராசியிலும், நவாம்சத்திலும் இருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த யோகங்கள் உரிய பலனைத் தராது. அதை நினைவில் வையுங்கள். Navamsa is 1/9 th division of a Rasi Chart. In short it is the magnified version of the Rasi Chart! அவை எல்லாவற்றையும் விட முக்கியம். ஜாதகத்தில் லக்கின அதிபதி வலுவாக இருக்க வேண்டும். வலு என்பது சூப்பர் சுப்பராயன் போன்ற உடல் வலு அல்ல! லக்கின அதிபதி லக்கினத்தில் இருக்க வேண்டும். அல்லது தனது பார்வையால் லக்கினத்தைத் தன் கையில் வைத்திருக்க வேண்டும். குரு அல்லது புதன் லக்கினத்தில் இருக்க வேண்டும். அல்லது லக்கினம் அவர்களின் பார்வையைப் பெற்றிருக்க வேண்டும். Lagna is deemed to be strong only when it is aspected or occupied by its own lord, Jupiter or Mercury and not by other planets

, கிரகமாலிகா யோகம்

கிரகமாலிகா யோகம் (மாலை யோகம்) மாலிகா என்னும் வடமொழிச் சொல்லிற்கு மாலை (garland) என்று பொருள். சூரியன், சந்திரன், செவ்வாய்,புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் அடுத்தடுத்து ஏழு ராசிகளில் இருந்தால் அதற்குப் பெயர் மாலை யோகம். நான் எழுதியுள்ள வரிசைப்படி என்று இல்லை, வேறுவிதமான வரிசையில் கூட இருக்கலாம். எந்த வரிசையில் வேண்டுமென்றாலும் இருக்கட்டும். இருந்தால் அது மாலையோகம் எனப்படும் பார்ப்பதற்கே அழகாக இருக்கும். அந்த அமைப்புள்ள ஜாதகன் அழகான தோற்றமுடையவனாகவும், செல்வம் நிறைந்தவனாகவும், மகிழ்ச்சி நிறைந்தவனாகவும் இருப்பான்

A planetary combination under which all planets occupy consecutive houses leaving the intervening cardinal houses vacant. The individual under this combination is happy, handsome, and is provided with much ornaments, gems and jewels.

ஏழு ராசிகளுக்குள் இல்லையென்றாலும், ஆறு ராசிகளுக்குள், அந்த ஏழு கிரகங்கள் இருந்தாலும் அது மாலை யோகக் கணக்கில் வரும் அது லக்கினத்தைத் தவிர்த்து அமைய வேண்டும்! Grahamalika "planetary garland" Yoga: All the nine planets consecutively in six or seven houses from the lagna. The native with a Grahamalika Yoga will be fortunate

உபரிச் செய்திகள்: Pancha-grahamalika Yoga: This is another type of Malika Yoga that considers Rahu and Ketu along with the visible planets. It is impossible for all the nine planets to be in less than 7 houses, therefore with respect to all the planets falling in 5 or 6 consecutive houses, consider the seven visible planets and only one of Rahu or Ketu. Just like the first group of Malika Yogas discussed, the Grahamalika Yogas are not dasa dependent, rather they indicate a foundation for success. The result of a Malika Yoga is dependent upon the house from which the yoga begins. The indications of that house will dictate the theme of the yoga. The Malika Yogas commencing from the dusthanas, therefore, have some undesirable effects, though all of them provide a foundation for success. If the Malika Yoga formed is also one of the troublesome house, though creating a foundation for success, the yoga will still indicate weaknesses in character that make it difficult for the native to really be happy and secure.

, கேமதுருமா யோகம்

கேமதுருமா யோகம்! இது ஒரு அவயோகம்! ஜாதகத்தில் சந்திரனுக்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகளில் வேறு எந்தக் கிரகமும் இல்லாமல் இருந்து, சந்திரனும் வேறு எவருடைய கூட்டணியும் இல்லாமல் தனித்து இருந்து, சந்திரனுக்கு 7ஆம் வீட்டில் எந்த கிரகமும் இல்லாமலிருந்தால் அதற்குப் பெயர் கேமதுருமாயோகம்! If moon is alone, doesnt have any planet before and after and also in front then it is Kemadruma. For Example moon in 2nd house. 1st , 3rd and 8th house is empty. Rahu and Ketu are not actual planet and they do not cancel the yoga if they are in the above mentioned houses

பலன் என்ன? சந்திரன் மனதிற்கான கிரகம். இந்த அமைப்புள்ள ஜாதகனுக்கு மனப் பிரச்சினைகள் ஒன்று மாற்றி ஒன்று இருந்து கொண்டே இருக்கும் இந்த அமைப்புள்ள ஜாதகனை அடிக்கடி துன்பம் சூழும், ஜாதகனிடம் பெருந்தன்மை இருக்காது. ஜாதகன் வறுமையில் கஷ்டப்பட நேரிடும்.

Kemdruma gives trouble to mind. Since moon is mind and is alone it can be destructive. Many of the serial killers from the history have this yoga. It also makes the person very poor, mentally instable, gives inner fears, phobias, takes away happiness. It makes one do crimes

இந்த அமைப்புள்ள ஜாதகன் அல்லது ஜாதகி, வயதான காலத்தில் தனித்திருக்க நேரிடும். வயதான காலத்தில் சிலரை நிரந்தமாகப் புலம்பும் நிலைக்குக் கொண்டுவந்து விட்டுவிடும்! அவர்கள் தனிமையில் வாட நேரிடும் உடனே பயந்து விடாதீர்கள். இந்த அமைப்பிற்கு சில விதிவிலக்குகள் உண்டு. இந்த அமைப்பில், சந்திரனுக்கு ஏழாம் வீட்டில், ராகு கேதுவைத் தவிர்த்து மற்ற ஆறு கிரகங்களில் ஏதாவது ஒன்று 7ஆம் வீட்டில் இருந்தால் இந்த யோகம் காணாமற்போய்விடும். அதோடு அது நன்மையாகவும் மாறிவிடும

் If there is a planet in house opposite (7th house from moon), it not only cancels Kemadruma, but gives kalpadruma yoga (similar to neecha bhanga raja yoga.) குரு லக்கினத்தில் அல்லது கேந்திர வீடுகளில் இருந்தால், இந்த அவயோகம் ஜாதகனை அனுகாமல் காத்து நிற்கும்! ஆனால் கேமதுருமா அமைப்பே ஒரு கேந்திர வீட்டில் இருந்தால் ஜாதகனின் நிலைமை மோசமாக இருக்கும் இந்த

அவயோகம் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட திரிபுர மந்திரத்தை அனுதினமும் 108 முறைகள் சொல்வது நல்லது. மந்திரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் சொல்லலாம். மற்றவர்கள் ஜூட் விட்டு விடலாம். வருவதை எதிர் கொள்ளலாம்!

திரிபுர மந்திரம் (Tripura Sundari Mantra) அதாவது திரிபுரசுந்தரி தேவியை வணங்கிச் சொல்லும் மந்திரம்!

ஓம் திரிபுரசுந்தரி போற்றி! ஓம் திரிபுரசுந்தரி போற்றி!

இதே மந்திரம் வடமொழியில்: க்லீம் த்ரிபுரசுந்தரிமூர்த்தயே நமஹ" க்லீம் த்ரிபுரசுந்தரிமூர்த்தயே நமஹ"

Kleem Tripurasundarimoorthaye Namah Kleem Tripurasundarimoorthaye Namah

, லக்ஷ்மியோகம்

லக்ஷ்மியோகம் எல்லோரும் விரும்பும் யோகம் இந்த யோகம். இந்த யோகம் இருப்பவன் ஜாதகத்தைக் கையில் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த யோகத்திற்கான ஜாதக அமைப்பு என்ன? லக்கினாதிபதி வலிமையாக இருக்க வேண்டும். அத்துடன் 9ஆம் அதிபதி சொந்த அல்லது உச்ச வீட்டில் இருக்க வேண்டும் (அது கேந்திர வீடாக அல்லது திரிகோணவீடாக இருக்க வேண்டும். அது லக்கினத்தில் இருந்தும் இருக்கலாம். அல்லது லக்கினாதிபதி இருக்கும் இடத்தில் இருந்து இருக்கலாம் If the lord of Lagna is powerful and the lord of the 9th occupies own or exaltation sign identical with a Kendra or Thrikona, Lakshmi Yoga is caused.

பலன் என்ன? பலன்

1 ஜாதகன் அரவிந்தசாமியைப் போல (ரோஜா/தளபதி படங்களில் வரும் அரவிந்தசாமியைப் போல) அழகாக இருப்பான். பெண்ணாக இருந்தால் மிகவும் அழகாக இருப்பாள். பார்ப்பவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் விதமான அழகுடன் இருப்பாள். பெண்ணுக்குப் பெண்ணே பொறாமைப்படும் விதத்தில் அழகுடன் இருப்பாள். கையெடுத்துக் கும்பிட வைக்கும் அழகோடு இருப்பாள்.( அதனால்தான் எந்த நடிகையையும் உதாரணமாகச் சொல்லவில்லை)

2 ஜாதகன் செல்வத்தோடு இருப்பான். உயர்ந்த குணங்களை உடையவனாக இருப்பான். நன்கு கற்றவனாக இருப்பான். மதிப்பும் மரியாதையும் மிக்கவனாக இருப்பான். நல்ல ஆளுமைத் திறமை கொண்டவனாக இருப்பான். வாழ்க்கையின் எல்லா வசதிகளையும் உடையவனாக இருப்பான். அதைவிட முக்கியமாக எப்பொதும் மகிழ்ச்சியை உடையவனாக இருப்பான். பெண்ணாக இருந்தாலும் இதே பலன்கள் உண்டு!

The person will be wealthy, noble, learned, a man of high integrity and reputation, handsome appearance, a good ruler, and enjoying all the pleasures and comforts of life.

பலன் எப்போது? லக்கினாதிபதி மற்றும் ஒன்பதாம் அதிபதி ஆகியவர்களின் தசை/ புத்திக் காலங்களில் பலன்கள் உண்டாகும்/கிடைக்கும் மேலதிகத்தகவல்கள்:

Different definitions of the Lakshmi Yoga. Lakshmi Yoga will arise by the mutual association of lords of Lagna and the 9th; (b) by the lord of the 9th occupying Kendra, Thrikona, or exaltation and the lord of Lagna being disposed powerfully; and (c) by the lord of the 9th and Venus being posited in own or exaltation places which should be Kendras or Trikonas. Obviously, Lakshmi Yoga presumes the strength of lord of Lagna, Venus, and the lord of the 9th. Lakshmi has predominantly to do with wealth and one born in this combination will be wealthy, the degree of wealth varying with regard to the degree of strength or weakness of the planets causing the Yoga. The most powerful type of Lakshmi Yoga will give immense wealth, while the mutual association of or aspect between the lords of Lagna and the 9th in houses other than 3, 6 and 8 would also result in an ordinary type of Lakshmi Yoga which might be fortified by the presence of other Dhana Yogas

அந்த இருவரும், பகை நீசம், அஸ்தமனம், வக்கிரம் என்று ஏதாவது டேமேஜ் ஆகியிருந்தால் இந்த யோகம் இருக்காது! பாதியாவது இருக்காதா? என்று யாரும் கேட்கவேண்டாம். பாதி அழகாக இருந்தால் எப்படி இருக்கும் யோசித்துப்பாருங்கள். தலையில் பாதி முடி இருந்தால் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள் பாதிக் கிணறு தாண்டினால் என்ன ஆகும் யோசித்துப் பாருங்கள் ஆகவே உங்கள் ஜாதகத்தைவைத்து நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் வேறு அமைப்புக்களை இதனுடன் கோந்து போட்டு ஒட்டி, கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம் லக்ஷ்மி யோகம் இருந்தால் இருக்கட்டும். இல்லையென்றால் போகட்டும் என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் மதிப்பெண் 337 மட்டுமே. அதை மனதில் வையுங்கள் லக்ஷ்மி இல்லாவிட்டால் உங்கள் ஜாதகத்தில் பராசக்தி இருப்பார் அல்லது சரஸ்வதி இருப்பார். யார் இருக்கிறார் என்பது போகப்போகத் தெரியும்.

, சகடயோகம்

சகடயோகம்! சகட என்னும் வடமொழிச் சொல்லிற்கு சக்கரம் என்று பெயர் சக்கரயோகம் என்று தனித் தமிழில் சொல்லாமல் சகடயோகம் என்றே சொல்லுங்கள். சிலவற்றை மொழிமாற்றம் செய்யாமல் அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் உசிதம் சகடயோகம் எப்போது ஏற்படும்? குருவிற்கு 6, 8, 12ஆம் வீடுகளில் சந்திரன் அமர்ந்திருந்தால், அது சகட யோகத்தைக் கொடுக்கும் Sakata yoga forms when Moon is placed in 6th, 8th or 12th from the Jupiter.

என்ன பலன்? 1. ஜாதகனின் வாழ்க்கை சக்கரம்போல சுழன்று கொண்டே இருக்கும். ஜாதகன் ஒரு இடத்தில் இருக்க மாட்டான். தன்னுடைய வேலை காரணமாக அல்லது பொருள் ஈட்டல் காரணமாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாறிக் கொண்டே இருப்பான் அல்லது அலைந்து கொண்டே இருப்பான்.

Person with sakata yoga in his horoscope has to keep moving from one place to another for some work or the other.

எல்லோருமே இருந்த இடத்தில் அல்லது இருக்கும்/வசிக்கும் ஊர்களில் இருந்து கொண்டே தங்கள் பணிகளைச் செய்ய ஆசைப் படுவார்கள். சகடயோகம் அதை அனுமதிக்காது.அலைய வைக்கும். உங்கள் மொழியில் சொன்னால் சுற்ற விடும்!

People like to be working at the same city or town where they reside. Sakata yoga does not allow this. பலன்

2 சக்கரம் சுழலும்போது மேற்பகுதி கீழேயும், கீழ்ப்பகுதி மேலேயும் மாறி மாறி வருவதைப்போல, சகடயோக ஜாதகக்காரர்களின் அதிர்ஷ்ட நிலைமை தடைப்படுவதும், தடைநீங்கப் பெறுவதுமாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் one born in Sakata will have his fortune obstructed now and then. The native loses fortune and may regain it.

The periods of misfortune will accord with the times of transits in malefic Rasis – 6th, 8th and 12th. Every time the Moon transits the 6th, 8th and 12th from the radical Jupiter, the effects of Sakata are realised.

ஒருவனுக்கு எட்டில் இன்னொருவன் என்றால், அவனுக்கு, இவனுடைய இடம் 6ஆம் இடம் ஒருவனுக்கு ஆறில் இன்னொருவன் என்றால், அவனுக்கு, இவனுடைய இடம் 8ஆம் இடம் ஜாதகங்களில் நன்மை செய்யும் கிரகங்கள் 6/8 அல்லது 8/6 நிலையில் இருப்பது நல்லதல்ல. அதை அஷ்டம சஷ்டமம் என்பார்கள். எட்டாம் பொருத்தம் என்பார்கள் திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது, பெண்ணின் ராசி, பையனின் ராசிக்கு எட்டில் இருக்கக்கூடாது. ஆறிலும் இருக்கக்கூடாது இருந்து செய்தால் என்ன ஆகும்? செய்துபாருங்கள். சிலவற்றை செய்து அனுபவித்தால்தான் உண்மை தெரியவரும்:-))))))

பரிகாரம் உண்டா? சகடயோக ஜாதகக்காரன், தன்னுடைய வாழ்க்கையை அதற்குத் தகுந்தபடி அமைத்துக்கொள்ள வேண்டும்.தன் தொழிலால் குடும்பமும், குடும்பத்தால் தொழிலும் பாதிக்காதவகையில் இரண்டையும் அனுசரித்து வைத்துக்கொள்ள வேண்டும். Travelling agent, Travelling salesman,

Medical representative, Railway Guards, Drivers

ஆகிய இதுபோன்ற தொழில்களை சகட யோகத்தொழில்களாகக் கொள்ளலாம் இதை ஒரு உதாரணத்திற்காகக் கொடுத்துள்ளேன். எனக்கு அப்படி இல்லையே என்று யாரும் கேட்க வேண்டாம். உங்கள் ஜாதகத்தை எழுதும்போது பிரம்மா தூக்க கலக்கத்தில் இருந்திருக்கலாம்:-))) சகட யோகம் ஜாதகத்தில் உள்ள மற்ற ராஜ யோகங்களைத் தடுக்காது. அந்த யோகங்கள் பலமாக இருந்தால், இது வளைந்து கொடுக்கும்!

சகடயோகச் சந்திரன், ஜாதகனின் லக்கினத்தில் இருந்து திரிகோணத்தில் இருந்தால், சகடயோகம் ரத்தாகிவிடும்.உங்கள் மொழியில் சொன்னால் கேன்சலாகிவிடும் சகடயோகச் சந்திரன் குருவின் நட்சத்திரத்தில் இருந்தாலும் கேன்சலாகிவிடும் சகடயோகச் சந்திரன், நவாம்சத்தில் குருவுடன் சேர்ந்து ஒரே ராசியில் இருந்தாலும் யோகம் கேன்சலாகிவிடும் சகடயோகத்தைத் தரும் இருவரில் ஒருவர் ராசியில் உச்சமாகவும், மற்றொருவர் நவாம்சத்தில் உச்சமாக இருந்தாலும், யோகம் கேன்சலாகிவிடும் கேன்சலாகிவிட்டதே என்று கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு உட்கார வேண்டாம். கேன்சலாகிவிட்டால் நல்லதுதான். இது அவயோகம். அதாவது அவதியான யோகம். அவதி கேன்சலானால் நல்லதுதானே?

சந்திரனுக்கு 6,8,12இல் குரு இருந்தால் அதனை ஜோதிடத்தில் சகட யோகம் எனக் கூறுவர். அதுபோன்ற அமைப்பு உள்ளவர்களுக்கு இருதயக் கோளாறு, கொலஸ்ட்ரால் அதிகரிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.

, பாஸ்கரா யோகம்

பாஸ்கரா யோகம் இது ஒரு நல்ல யோகம். ஆனால் அரிதான யோகம். மூன்று நிலைப்பாடுகள் சம்பந்தப்பட்டுள்ளதால் அரிதானதாகத் தோன்றும். புதன், சூரியனுக்கு அடுத்த வீட்டிலும், சந்திரன், புதனுக்குப் பதினொன்றாம் வீட்டிலும், குரு சந்திரனுக்குக் கேந்திர வீட்டிலும் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். பலன்: ஜாதகன் அதிகம் படித்தவன் அல்லது கற்றவன், வல்லவன், வலிமை மிக்கவன், துணிச்சலானவன். மதக்கோட்பாடுகளில் ஞானம் உள்ளவன். கணிதத்தில் தேர்ந்தவன். பாரம்பரிய இசையின் நுட்பங்களை அறிந்தவன்.

, ஆதி யோகம்

ஆதி யோகம்!

புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று சுபக் கிரகங்களும், ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 6, 7, 8 ஆம் வீடுகளில் இருந்தால், தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ இருந்தால், அது ஆதியோகம் எனப்படும். அந்த வீடுகள் ஒன்றில் அல்லது இரண்டில் அல்லது மூன்றிலுமே அவைகள் இருந்தாலும் அது இந்த யோகத்தைக் கொடுக்கும்!

பலன்: ஜாதகன் செல்வாக்குடன் இருப்பான். ஆரோக்கியத்துடனும், செல்வங்களுடனும் இருப்பான். நோய், எதிரிகள், பயம் என்று எந்த அவலமும் அவனை அனுகாது!

Adhi Yoga : This is caused if the benefic planets – Mercury, Jupiter and Venus – are situated in the 6th, 7th and 8th houses from the Moon. These planets should be present in any one, two or in all the above-mentioned houses. A native with this Yoga will be very influential, healthy and wealthy. He will possess no fear, disease or enemy.

, மாமனித யோகம்

மாமனித யோகம்! மாமனிதர் என்று சிலரைச் சொல்வோம். அதாவது He is a great man என்று சிலரைச் சொல்வோம். அதற்கான ஜாதக அமைப்பு என்ன?

பஞ்ச மகாபுருஷ யோகம்! செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் ஒருவரின் ஜாதகத்தில் ஒட்டு மொத்தமாக வலுவாக இருந்தால் அது இந்த யோகத்தைக் கொடுக்கும். சார் இந்த ஐந்தில் 3 எனக்கு இருக்கிறது. ஆகவே இதில் பாதி எனக்குக் கிடைக்குமா என்று யாரும் கேட்காதீர்கள். இருந்தால் அந்த 5 கிரகங்களுமே வலுவாக இருக்க வேண்டும். இல்லை என்றால் இல்லை! கிணற்றின் விட்டம் 5 அடி, 3 அடி மட்டும் தாண்டினால் போதுமா என்று பாருங்கள். 5 அடிகளையும் தாண்டினால் மட்டுமே, நீங்கள் கிணற்றின் மறுபக்கம் குதிக்க முடியும். இல்லையென்றால் கிணற்றிற்குள்ளேதான் விழுந்து எழுந்திரிக்க வேண்டும். இதுவும் அப்படித்தான்

வலு என்றால் என்ன? அந்தக் கிரகங்கள் வலிமையாக (powerful) இருந்து தனித்தனியாக சில யோகங்களைக் கொடுக்கும்.அந்த ஐந்து யோகங்களும் ஜாதகனுக்கு இருக்கும் நிலைமைதான் மகா புருஷ யோகம். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

1 ருச்சகா யோகம்: செவ்வாய் – செவ்வாயை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். செவ்வாய் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மகரராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.

2 பத்ரா யோகம்: புதன் – புதனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். புதன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கன்னிராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.

3 ஹம்ஸ யோகம்: குரு – குரு பகவானை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். குரு தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கடக ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.

4 மாளவ்ய யோகம்: சுக்கிரன் – சுக்கிரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சுக்கிரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மீன ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு. 5 சஷ்ய யோகம்: சனி – சனீஷ்வரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சனீஷ்வரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று துலா இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.

Planetary combinations formed by Mars, Mercury, Jupiter, Venus, and Saturn in their own sign or in exaltation, occupying a cardinal house. Each of these planets forms the yoga singly, and each of them has a separate name and effect. Ruchaka yoga is formed by such a placement of Mars, Bhadra by Mercury, Hamsa by Jupiter, Malavya by Venus, and Sasa Yoga by Saturn.

பலன்: இந்த யோகம் ஜாதகனுக்குத் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழிலிலும் உறவுகளிலும், அதீத மேன்மையைக் கொடுக்கும். ஜாதகன் பெயரும்,புகழும் பெற்றுத் திகழ்வான். நாடே அறிந்த மனிதனாக இருப்பான்.ஏராளமான சொத்தும், செல்வமும் அவனைத் தேடிவரும்! This yoga is known to give a lot of wealth, name and fame to the native of the horoscope!

, வர்கோத்தமம் என்றால் என்ன?

வர்கோத்தமம்! வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும்! ராசி, மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்! ராசி கட்டத்தில் சிம்மத்தில் செவ்வாய் இருந்து, அம்சத்திலும் சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் அதற்கு வர்கோத்தம செவ்வாய் என்று பெயர்! சிம்மத்திற்கு செவ்வாய் யோககாரகன். அவன் வர்கோத்தமமும் பெற்றால் ஜாதகனுக்கு இரட்டிப்பு யோகங்களைக் கொடுப்பார். நல்ல பலன்களைக் கொடுப்பார் உங்கள் மொழியில் சொன்னால், சாதாரணப் பேருந்து, மாடிப் பேருந்தாக மாறிவிடும்!

An ordinary bus will become a double decker bus!

பலன்: அப்படி வர்கோத்தமம் பெறும் கிரகம் வலிமை உடையதாக ஆகிவிடும். அந்த அமைப்பு ஜாதகனுக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும்! இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும். கீழே பட்டியல் உள்ளது!

லக்கினம் வர்கோத்தமம் பெற்றால், ஜாதகன் நீண்ட ஆயுளூடன் இருப்பான்! மற்ற பலன்கள்:

சூரியன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்குத் தலைமை ஏற்கும் தகுதியைக் கொடுக்கும்.

சந்திரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத மன வலிமையைக் கொடுக்கும். எதையும் சட்’டென்று புரிந்து கொள்ளும் தன்மையைக் கொடுக்கும்

செவ்வாய் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஆற்றலை, செயல் திறனைக் கொடுக்கும்

புதன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத பேச்சுத் திறமையைக் கொடுக்கும்.

குரு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத புத்திசாலித்தனத்தைக் கொடுக்கும்

சுக்கிரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அழகையும், கவரும் தன்மையையும் கொடுக்கும்

சனி வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதப் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கொடுக்கும்

ராகு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதத் துணிச்சலைக் கொடுக்கும் கேது வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஞானத்தைக் கொடுக்கும்

இது தவிர, வர்கோத்தமம் பெறும் கிரகம், ஜாதகத்தில் அது எந்த பாவத்திற்கு/வீட்டிற்கு உரியதோ, அந்த வீட்டிற்கான பலன்களை உரிய நேரத்தில் வாரி வழங்கும் இவை எல்லாமே பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு இந்தப் பலன்கள், மற்ற கிரகங்களின் பார்வை, சேர்க்கை, வக்கிர நிலைமை, அஸ்தமனம், போன்ற இதர விஷயங்களை வைத்துக் கூடலாம், அல்லது குறையலாம், அல்லது இல்லாமலும் போகலாம். அது அவரவர் வாங்கி வந்த வரத்தைப் பொறுத்தது.

ஏழாம் வீட்டு அதிபதி, ராசி & நவாம்சம் இரண்டிலும் ஒரே இடத்தில் வர்கோத்தமம் பெற்றிருந்தால், ஜாதகனுக்கு, அசத்தலான மனைவி கிடைப்பாள். ஜாதகியாக இருந்தால் அசத்தலான கணவன் கிடைப்பான். இதே பலன், பத்தாம் வீட்டிற்கு எனும் போது, ராசியிலும், தசாம்ச சக்கரத்திலும்,

பத்தாம் வீட்டு அதிபதி வர்கோத்தமம் பெற்றிருக்க வேண்டும். பெற்றிருந்தால், ஜாதகனுக்கு அசத்தலான வேலை கிடைக்கும் அல்லது அசத்தலான தொழில் அமையும்!

, பாப கர்த்தாரி யோகம்

பாப கர்த்தாரி யோகம்! தமிழில்: கத்திரி யோகம்! கர்த்தாரி என்னும் வடமொழிச்சொல்லிற்கு வெட்டுக் கத்தி என்று பெயர். அப்படியுள்ள இரண்டு கத்திகளை ஒன்று சேர்த்தால் அது கத்திரிக்கோல் ஆகிவிடும். Kartari (Sanskrit) = chopper பாபகர்த்தாரி யோகம் என்பது, கத்தரிக்குள் மாட்டிக்கொண்ட யோகம் என்று வைத்துக்கொள்ளுங்கள். கத்திரிக்குள் (scissors) மாட்டிக் கொண்டால் என்ன ஆகும்? வெட்டுப்பட்டுப் போகும். வெட்டுப்படுதலில் தீயதும் நடக்கும். நல்லதும் நடக்கும். நல்லதா? ஆமாம் சாமி துணி வெட்டுப்பட்டுதானே நீங்கள் அணிந்து கொள்ளும் சட்டையாக மாறுகிறது? ஆகவே இந்த யோகத்தில், அதிகமாகத் தீமையே உண்டு. சில நேரங்களில், சில அமைப்புக்களால் நன்மையும் உண்டு.

எப்போது உண்டாகும்? இரண்டு தீய கிரகங்கள் ஒரு வீட்டின் இரு பக்கமும் அல்லது ஒருகிரகத்தின் இருபக்கமும் அமர்ந்திருந்தால் அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும்! It occurs when malefics enclose a planet or a house. Kartari means scissors, and papa means sin. This is also called hemmed in. This yoga is caused by planets being placed around a certain house and/or planet. The most generally occurring scissors yoga is when two benefics or malefics enclose a planet or a house. பலன்: நடுவில் மாட்டிக்கொண்ட வீட்டின் பலன்கள் கெடும் அல்லது பலன்கள் அநியாயத்திற்குத் தாமதமாகும்.

உதாரணத்திற்கு, 7ஆம் வீட்டின் இருபுறமும் தீய கிரகங்கள் இருந்தால், ஜாதகனின் திருமணம், தள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளிக் கொண்டே போகும். ஜாதகத்தில் வேறு நல்ல அமைப்புக்கள் இல்லாமலிருந்தால், திருமணமே நடக்காமல் போய்விடும் அபாயமும் உண்டு. அப்படியே திருமணம் ஆகியிருந்தாலும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியில்லாமல் இருக்கும். இதே அமைப்பு 10ஆம் வீட்டிற்கு ஏற்பட்டாலும், அதாவது பத்தாம் வீட்டின் இரு புறமும் தீய கிரகங்கள் இருந்தாலும், ஜாதகனுக்கு வேலை கிடைக்காது. கிடைத்தாலும் திருப்தியிருக்காது. அவதியாக இருக்கும். இந்த அமைப்பு ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும், அப்படியே அந்த வீட்டிற்கான பலாபலன்கள் கெடும். அவை என்னவென்று சம்பந்தப்பட்ட அந்த வீட்டை வைத்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 4 என்றால் கல்வி, 5 என்றால் குழந்தைபாக்கியம் இப்படி…..!

இதே அமைப்பில் சிலருக்கு நன்மையும் கிடைக்கக்கூடும்! அது என்ன? ஒரு வீட்டின் இருபுறமும் அல்லது ஒரு கிரகத்தின் இருபுறமும் சுபக் கிரகங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட அந்த வீட்டிற்கு நன்மையான பலன்கள் அபரிதமாகக் கிடைக்கும். வெட்டுப்பட்ட துணி சட்டையாக உரு மாறுவதைப்போல என்று வைத்துக் கொள்ளுங்கள்

தீமைகளைச் செய்யக்கூடிய கிரகங்கள்: சனி, செவ்வாய், ராகு, கேது & சூரியன் The malefic planets are Saturn, Mars, Rahu, Ketu and Sun. நன்மைகளைச் செய்யக்கூடிய கிரகங்கள்: குரு, சந்திரன், சுக்கிரன் & புதன் The benefic planets are Jupiter, Venus, and Mercury.

உதாரணங்கள்:

1. ரிஷபத்தில் சுக்கிரன். அதன் பின்னால் மேஷத்தில் சனி, அதற்கு முன்னால் மிதுனத்தில் செவ்வாய் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அது ரிஷப வீட்டிற்குப் பாப கர்த்தாரி யோகத்தைக் கொடுக்கும். கொடுத்தால் என்ன ஆகும்? சுக்கிரனால் சரிவர இயங்க முடியாது. ஜாதகனுக்கு உரிய பலனைத் தரமுடியாது. ஜாதகன் காசு இருந்தும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியாக இருப்பான். சுகங்களை அனுபவிக்க முடியாது. (கத்திரியைக் கீழே வையுங்கள்: இது பொதுப்பலன்)

2. இதைப்போல ஐந்தாம் வீட்டின் இருபுறமும் இரு தீய கிரகங்கள். ஐந்தாம் வீட்டில் எந்தகிரகமும் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த அமைப்பு ஜாதகனின் குழந்தைகளைப் பாதிக்கும். அதாவது ஜாதகன் தன்னுடைய குழந்தைகளால் அவதிப் படுவான் அல்லது குழந்தை இல்லாமல் அவதிப்படுவான் (எச்சரிக்கை: இதுவும் பொதுப்பலன்)

இரண்டு தீய கிரகங்களுக்கு இடையில் லக்கினம் மாட்டிக்கொண்டு விட்டால், ஜாதகன் குணக்கேடு உடையவனாக இருப்பான். அதனால் பல சிக்கல்களை அவன் எதிர்கொள்ள நேரிடும்.

, அஷ்டலெட்சுமி யோகம்

அஷ்டலெட்சுமி யோகம்! அஷ்டலெட்சுமி யோகம் என்பது குரு கேந்திர வீடுகள் ஒன்றில் இருந்து (அதாவது 1, 4, 7, 10ஆம் வீடுகள் ஒன்றில்), அத்துடன் ஆறாம் வீட்டில் ராகுவும் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். பலன்: ஜாதகனுக்கு தனிப்பட்ட பெயர், புகழ், வளர்ச்சி, உயர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி, எதையும் அனுபவிக்கும் பாக்கியம் அனைத்தும் கிடைக்கும்

Ashtalakshmi yoga is formed when Jupiter is in 1st,, 4th, 7th and 10th house and Rahu in 6th house. Ashtalakshmi yoga will give the individual name,fame, prosperity, and peaceful, enjoyment in life.

எட்டு மடங்கு யோகம் என்பார்கள்

Yoga for the Eightfold Prosperity (Ashta Laksmi Yoga ) If the North Node ( Rahu ) is in the 6th And if Jupiter is angular Then this Yoga is formed. This combination for Eightfold Prosperity !

இதைக்குறிப்பிடும் ஜோதிட ஸ்லோகம்:

சஷ்ட ஸ்தான கதே ராகு லக்ன கேந்த்ர கதே குரு அஷ்டலக்‌ஷ்மி சமயுக்தம் மத்யவான் கீர்த்திமான் நர!

The sloka for Ashtalakshmi Yoga is this Shashta Sthana Gathe Rahu ( Rahu in the 6th ) Lagna Kendra Gathe Guru ( Jup angular ) Ashtalakshmee Samayuktham Madhyavan Keerthiman Nara.

எட்டு மடங்கு யோகம் என்பது அஷ்ட லெட்சுமிகளைக் குறிக்கும் அவைகளைப் பற்றிய விவரம்:

தனலெட்சுமி – செல்வத்திற்கு (Dhana Lakshmi – Wealth as prosperity)

தான்யலெட்சுமி – விளைச்சலுக்கு, விவசாயத்தின் மூலம் வளர்ச்சிக்கு! (Dhanya Lakshmi – Agriculture as prosperity

தைரியலெட்சுமி – துணிச்சலுக்கு, தைரியத்திற்கு Dhairya Lakshmi – Courage)

விஜயலெட்சுமி – வெற்றிக்கு (Vijaya Laksmi – Victory)

ஆதி லெட்சுமி – சக்திக்கு (Adi Laksmi – Power)

வித்யா லெட்சுமி – கல்விக்கு, கற்றலுக்கு (Vidya Laksmi – Learning)

கஜலெட்சுமி – ஊக்கத்திற்கு, மன உறுதிக்கு (Gaja Lakshmi Will Power)

சந்தானலெட்சுமி – குழந்தைச் செல்வத்திற்கு (Santhana Lakshmi Children as prosperity) The native born under this yoga, enjoys the Eightfold Prosperity. Rahu and Jupiter should be powerful, however, to confer the full benefits of this yoga.

, படுக்கவைக்கும் யோகம்

படுக்கவைக்கும் யோகம்!

அரிஷ்ட என்பது வடமொழிச்சொல். அது தீங்கு (evil) என்று பொருள்படும். அரிஷ்டயோகம் என்பது தீங்கை விளைவிக்கக்கூடிய தன்மையையுடைய யோகம் என்று பொருள்படும். அதேபோல ஆபத்தானது என்றும் பொருள் படும். உதாரணத்திற்குப் ‘பாலஅரிஷ்டம்’ என்பது பால + அரிஷ்ட = குழந்தைக்கு ஆபத்தை விளவிக்கக்கூடிய என்று பொருள்படும்

அரிஷ்ட யோகம் 1 (அவயோகம்தான்) தீங்கை விளைவிக்கக்கூடிய கிரக அமைப்பு! 1 லக்கின அதிபதி, 6, 8, அல்லது 12ஆம் அதிபதிகள் எவரேனும் ஒருவருடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது பார்வையில் இருக்க நேர்ந்தாலும், ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு. பலன்: ஜாதகன் தன்னுடைய உடல் ஆரோக்கியம் கெட்டு அவதிப்படுவான். Arishta Yoga: The Lagna lord is in conjunction or mutual aspect with the 6th, or the 8th, or the 12th house lords (If the lords of the 2nd and 7th houses are involved the effects are more severe). Result : The person will suffer from bad health (the planets that constitute this Yoga will give more specific information)

2. எட்டாம் வீட்டு அதிபதி 12ஆம் வீட்டுக்காரனுடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது அவனுடைய பார்வையைப் பெற்றிருந்தாலும், ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு. பலன்: ஜாதகன் தன்னுடைய உடல் ஆரோக்கியம் கெட்டு அவதிப்படுவான். Arishta Yoga The 8th house lord is conjunct or in mutual aspect with the lord of the 12th house lord (If the lords of the 2nd and 7th houses are involved the effects are more severe). Result : The person will suffer from bad health (the planets that constitute this Yoga will give more specific information).

, பாலஅரிஷ்டம்

பாலஅரிஷ்டம்!

அரிஷ்ட என்பது வடமொழிச்சொல். அது தீங்கு (evil) என்று பொருள்படும். அரிஷ்டயோகம் என்பது தீங்கை விளைவிக்கக்கூடிய தன்மையையுடைய யோகம் என்று பொருள்படும். அதேபோல ஆபத்தானது என்றும் பொருள் படும். உதாரணத்திற்குப் ‘பாலஅரிஷ்டம்’ என்பது பால + அரிஷ்ட = குழந்தைக்கு ஆபத்தை விளவிக்கக்கூடிய என்று பொருள்படும்

அரிஷ்ட யோகம் 1 (அவயோகம்தான்) தீங்கை விளைவிக்கக்கூடிய கிரக அமைப்பு! 1 லக்கின அதிபதி, 6, 8, அல்லது 12ஆம் அதிபதிகள் எவரேனும் ஒருவருடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது பார்வையில் இருக்க நேர்ந்தாலும், ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு. பலன்: ஜாதகன் தன்னுடைய உடல் ஆரோக்கியம் கெட்டு அவதிப்படுவான். Arishta Yoga: The Lagna lord is in conjunction or mutual aspect with the 6th, or the 8th, or the 12th house lords (If the lords of the 2nd and 7th houses are involved the effects are more severe). Result : The person will suffer from bad health (the planets that constitute this Yoga will give more specific information)

2. எட்டாம் வீட்டு அதிபதி 12ஆம் வீட்டுக்காரனுடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது அவனுடைய பார்வையைப் பெற்றிருந்தாலும், ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு. பலன்: ஜாதகன் தன்னுடைய உடல் ஆரோக்கியம் கெட்டு அவதிப்படுவான். Arishta Yoga The 8th house lord is conjunct or in mutual aspect with the lord of the 12th house lord (If the lords of the 2nd and 7th houses are involved the effects are more severe). Result : The person will suffer from bad health (the planets that constitute this Yoga will give more specific information).

, பந்துபிஸ்த்தயக்த யோகா

பந்துபிஸ்த்தயக்த யோகா: (உறவைக் கெடுக்கும் அவயோகம்) 4ஆம் வீட்டு அதிபதி தீய கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலும், அல்லது 6, 8, 12ஆம் இடங்களில் சென்று அமர்ந்தாலும், அல்லது பகை வீடுகளில் அமர்ந்திருந்தாலும், அல்லது நீசம் பெற்றிருந்தாலும் இந்த அவயோகம் உண்டு!

பலன்: ஜாதகனுக்கு தனது நெருங்கிய சொந்தங்களுடன் நல்ல உறவு இருக்காது. உறவுகளுடன் பிரச்சினைகள் இருக்கும். அது தவறான புரிதல்கள் அல்லது வேறு காரணங்களால் இருக்கலாம். எப்படியிருந்தாலும் அல்லது என்ன காரணமாக இருந்தாலும் ஜாதகன் தனிப்பட்டுப் போவான்.

, மாத்ருநாச யோகா

மாத்ருநாச யோகா: (தாய்ப் பாசத்திற்கு வேட்டு வைக்கும் யோகம்) சந்திரன் இரண்டு தீய கிரகங்களுக்கு இடையில் (Moon is hemmed between malefic) மாட்டிக்கொண்டு விட்டாலும் அல்லது தீய கிரகத்துடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது தீய கிரகத்தின் பார்வையைப் பெற்றிருந்தாலும் இந்த அவயோகம் உண்டு!

பலன்: ஜாதகனின் தாய், ஜாதகன் சிறுவனாக அல்லது இளைஞனாக இருக்கும்போதே இறந்து போய்விடுவார். தவறி நல்ல ஆயுள் பாவத்தோடு, அவர் உயிர் வாழ்ந்தாலும், ஜாதகனுடன் சுமூகமான உறவு இருக்காது.

, தைன்ய பரிவர்த்தனை யோகம்

தைன்ய பரிவர்த்தனை யோகம்! தைன்ய எனும் வடமொழிச் சொல்லிற்குப் பல பொருள்கள் உள்ளன. அவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்.

dainya — poverty = வறுமை dainya — and degradation = பங்கப்பட்ட dainya — humbleness; தாழ்ந்த dainya — humility = இழிவு, அவமானம் இதில் எதை வேண்டுமென்றாலும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஜாதகத்தில் இந்த யோகம் இருந்தால், அதை மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ள முடியாது

யோகத்தின் அமைப்பு: ஆறாம் வீட்டு அதிபதி, 1,2,3,4,5,7,9,10 & 11 ஆம் வீட்டுக்காரர்கள் ஒருவருடன் பரிவர்த்தனையாகி, அவருடைய வீட்டில் மாறி அமர்ந்திருக்கும் நிலைமை, இந்த யோகத்தைக் குறிக்கும்.

வில்லனுக்கு, உங்கள் பெண்ணைக் கட்டிக் கொடுத்தது போன்ற நிலைமை! உங்கள் மொழியில் சொன்னால் ஒரு கிரிமினலுக்கு உங்கள் பெண்ணைக் கட்டிக் கொடுத்தது போன்ற நிலைமை. என்னென்ன விளைவுகள் வரும் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.

பொதுப்பலன்: பரிவர்த்தனையில் சம்பந்தப்பட்ட வீடுகளால், வீட்டு அதிபதிகளால் உண்டாகும் பலன்கள் கெட்டுவிடும். உங்கள் மொழியில் சொன்னால் ஊற்றிக்கொண்டு விடும்! ஜாதகனுக்குத் தொடர்ந்து உபத்திரவங்கள் இருக்கும். உடற்கோளாறுகள் உண்டாகும். சிலர் துஷ்டத்தனம் மிகுந்தவர்களாக அல்லது ஒழுக்கமற்றவர்களாக இருப்பார்கள்.

The 6th house lord exchanges houses with the Lagna lord, or the 2nd lord, or the 3rd lord, or the 4th lord, or the 5th lord, or the 7th lord, or or the 9th lord, or the 10th lord, or the 11th lord Result : This combination leads to a wicked nature, persistent trouble from opponents, and ill health. wicked = sinful, mischievous, immoral =

துஷ்ட, கெட்ட, தீய, ஒழுக்கமற்ற, பாவகரமான என்று பொருள் கொள்ளவும் எனக்கு இந்த யோகம் இருக்கிறதே என்று யாரும் நொடிந்து போய் உட்கார்ந்து விடவேண்டாம். ஜாதகத்தின் வேறு அம்சங்களால் இது (இந்த யோகம்) தள்ளுபடியாகி இருக்கலாம் அல்லது செல்லாமல் போயிருக்கலாம். ஆகவே ஜாதகத்தின் மற்ற அம்சங்களையும் பார்த்து ஒரு முடிவிற்கு வாருங்கள்! லக்கினாதிபதி அல்லது ஒன்பதாம் அதிபதி வலுவாக இருந்தால், ஜாதகனுக்குப் பல உபத்திரவங்கள் பக்கத்திலேயே வராது. வந்தாலும் ஓடிவிடும். அப்படியே வந்தாலும் ஜாதகன் அவற்றை ஒரு கை பார்த்துவிடுவான். He will have the standing power or he will be equipped to handle any situation.

, கெட்ட யோகம்

கெட்ட யோகம்

பத்தாம் வீட்டு அதிபதி(Lord of the 1oth House) லக்கினத்திற்கு 6,8 12ஆம் வீடுகளில் உட்கார்ந்திருந்தால் அந்த அவல நிலைமை ஏற்படும். அதுவும் விரைய வீடான 12ல் அமர்ந்திருந்தால், ஜாதகனுக்கு, அவன் திறமைக்கு ஏற்ப, விருப்பத்திற்கேற்ப, தேவைக்கு ஏற்ப நல்ல வேலையோ அல்லது தொழிலோ கிடைக்காது. உங்கள் மொழியில் சொன்னால் சிக்காது. சிக்கினால்தான் அமுக்கிப் பிடித்துக்கொண்டு விடலாமே!

அந்த நிலைக்குப் பெயர் துர் யோகம். துர் எனும் வடமொழிச் சொல்லிற்கு கெட்ட என்று பெயர்.

பத்தாம் வீட்டதிபதி 12ல் இருந்தால், ஜாதகன் வேலை அல்லது தொழிலைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமில்லாதவன். அதைப்போல பத்தாம் வீட்டு அதிபதி 6 & 8 ஆம் வீடுகளில் அமர்ந்திருந்தாலும் இந்த நிலைமைதான். ஜாதகனின் வேலைகளில், பல தடைகள், கஷ்டங்கள், சிரமங்கள் உண்டாகும். உங்கள் மொழியில் சொன்னால் சும்மா சுமைப்பதை, அவன் நனைத்துச் சுமப்பான்

, துவஜ யோகம்

துவஜ யோகம்! துவஜ எனும் வடமொழிச் சொல்லிற்குக் கொடி (flag) என்று பெயர். கொடி யோகம் என்று இதனை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். கொடி யோகம் என்றால் கொடி பிடித்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாகப் போகும் யோகம் அல்ல! கொடியை உருவாக்கித் தலைமை தாங்கும் அல்லது தலைமை ஏற்கும் யோகம். இந்த யோகத்துடன் ஒரு குழந்தை பிறந்தால், நாட்டிற்குத் தலைமை தாங்கும் யோகத்துடன் அந்தக் குழந்தை பிறந்துள்ளது என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். தலைமை தாங்குவது என்பது எந்த அளவிற்கு (Level) வேண்டுமென்றாலும், ஜாதகத்தின் மற்ற அம்சங்களைப் பொறுத்து இருக்கலாம்.

யோகத்தின் அமைப்பு: ஜாதகத்தில், தீய கிரகங்கள் எல்லாம் எட்டாம் வீட்டில் இருக்க, சுபக்கிரகங்கள் எல்லாம் லக்கினத்தில் இருக்க வேண்டும். தீய கிரகங்கள்: செவ்வாய், சனி, ராகு அல்லது கேது சுபக்கிரகங்கள்: குரு, சுக்கிரன், சந்திரன் பலன்: ஜாதகன் தலைவனாக இருப்பான். அவன் உத்தரவை நிறைவேற்றப் பலர் காத்துக்கொண்டிருப்பார்கள். A planetary combination formed by all the malefic placed in the 8th house and all benefices in the ascendant. Under this combination, a leader is born

 

, சக்கர யோகம்

சக்கர யோகம்!

வண்டி, இயந்திரம் முதலியவற்றின் இயக்கத்திற்குப் பயன் படும் அச்சில் சுழலக்கூடிய வட்டமான உறுப்பு. காரின் சக்கரம். புராணத்தில் திருமாலின் கையில் உள்ளதும் சுழன்று சென்று பகைவரை அழிப்பதுமான ஆயுதம்! இன்னும் பல சக்கரங்கள் உள்ளன! காலச் சக்கரம் வாழ்க்கைச் சக்கரம் ராசிச் சக்கரம் நவாம்சச் சக்கரம் பொதுவாகச் சுழற்சியைக் கொடுப்பது எல்லாம் சக்கரம்தான். மனித உடம்பிலும் ஆறு சக்கரங்கள் இருந்து சக்தியை உருவாக்கிக் கொண்டிருக்கும் என்று சொல்வார்கள். அதை மேலே உள்ள படத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

யோகத்தின் அமைப்பு: பத்தாம் வீட்டில் ராகு, பத்தாம் வீட்டு அதிபதி லக்கினத்தில், லக்கின அதிபதி 9ஆம் வீட்டில் இருந்தால் அது இந்த யோகத்தைக் கொடுக்கும். அதுபோல ஒற்றைப் படை வீடுகளில், அதாவது ஜாதகத்தில் 1,(லக்கினம்), 3, 5,7,9,11 ஆகிய வீடுகளில் எல்லா கிரகங்களும் இருப்பதும் இந்த யோகத்தைக் கொடுக்கும். பலன்: ஜாதகன் நாட்டின் ஒரு பகுதிக்கு நிர்வாகியாகும் நிலைக்கு உயர்வான். அது கிராம அதிகாரி அல்லது பஞ்சயாத்து ஒன்றியத் தலைவர் பதவியில் இருந்து மாவட்ட ஆட்சியாளர், மாநில ஆளுனர், முதன் மந்திரி பதவி வரைக்கும் மாறுபடலாம். அந்த பதவி வித்தியாசம் ஏற்படுவதற்கு, குறிப்பிட்டுள்ள அந்த வீடுகளின்/வீட்டு அதிபர் களின் அஷ்டகவர்க்கப் பரல்கள், சுயவர்க்கப்பரல்களின் அளவு காரணமாக இருக்கும். ஜாதகன் பொதுவாகப் பலரின் மரியாதைக்கு உரியவனாக விளங்குவான். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உடையவனாக விளங்குவான். சிலர் ஜாதகத்தில் மற்ற அம்சங்கள் மாறுபடும்போது, ஜாதகன் ராணுவத்தில் சேர்ந்து நல்ல அந்தஸ்த்தில் பணிபுரிவான்.

, அரிஷ்ட யோகம்

அரிஷ்ட என்பது வடமொழிச்சொல். அது தீங்கு (evil) என்று பொருள்படும்.

யோகத்தின் பெயர்: அரிஷ்ட யோகம்: அதற்கான கிரக அமைப்பு: பல அமைப்புக்கள் உள்ளன. அந்த அமைப்புக்களில் ஒன்று இருந்தாலும் ஜாதகத்தில் உள்ள நல்ல தன்மைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஜாதகனுக்குப் பலவிதமான சிரமங்களை அது கொடுக்கும். தெரிந்தவரை சில அமைப்புக்களைக் கொடுத்துள்ளேன்.

1. 6, 8, 12ஆம் வீட்டுடன் அல்லது அதன் அதிபதியுடன், சேர்க்கை அல்லது பார்வையில் தீய கிரகங்கள் கூட்டு வைத்திருப்பது (Malefic associated with the 6th, 8th and 12th houses or their lords) அதாவது குரு, சுக்கிரன், சந்திரன், புதன் ஆகிய கிரகங்கள் 6, 8, 12ஆம் வீட்டு அதிபதிகளாக இருந்து அந்த வீட்டை, சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களில் ஒன்று சேர்க்கை அல்லது பார்வையில் அவர்களுடன் சம்பந்தப்பட்டிருப்பது.

2. நீசமாக உள்ள அல்லது அஷ்டகவர்க்கத்தில் 3ம் அல்லது அதற்குக் கீழாகவும் பெற்றுள்ள சந்திரன் தீய கிரகங்களின் பார்வையைப் பெற்றிருந்தால் அது இந்த அமைப்பிற்குள் வரும்

3. ஐந்தாம் வீட்டில் சூரியன், செவ்வாய் அல்லது சனி இருந்தால் அது இந்த அமைப்பிற்குள் வரும்

4. எட்டாம் வீட்டில் சூரியன், செவ்வாய் அல்லது சனி இருந்தாலும் அது இந்த அமைப்பிற்குள் வரும்

5. பலவீனமாக உள்ள லக்கின அதிபதியை அல்லது சூரியனை தீய கிரகங்கள் பார்த்தால் அது இந்த அமைப்பிற்குள்

6. லக்கினத்தில், சூரியன், செவ்வாய், சனி, ராகு ஆகிய நால்வரில் ஒருவர் இருந்தாலும் அது இந்த அமைப்பிற்குள் வரும

7. செவ்வாயும், சனியும் இரண்டாம் வீட்டில் இருக்க,ராகு மூன்றாம் வீட்டில் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்

8. நான்காம் வீட்டில் ராகு, 6 அல்லது 8ஆம் வீட்டில் சந்திரன் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்

9. 7ல் செவ்வாய், 8ல் சுக்கிரன், 9ல் சூரியன் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்

10. 7 & 12ஆம் வீடுகளில் தீய கிரகங்கள் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்

11. லக்கினாதிபதி தீய கிரகத்துடன் கூட்டாக இருந்தாலோ அல்லது லக்கினத்திற்கு இரு புறமும் தீய கிரகங்கள் இருந்தாலோ அல்லது 7ஆம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தாலோ அது இந்த அமைப்பிற்குள் வரும்

12. எட்டில் சனி, லக்கினத்தில் சந்திரன் அல்லது சுக்கிரன் (அல்லது சுக்கிரனும், சந்திரனும் சேர்ந்து 6 அல்லது 8ல் இருக்கும் நிலைப்பாடு) அது இந்த அமைப்பிற்குள் வரும்

13. சந்திரனும், புதனும் 6 அல்லது 8ல் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்

, நவாம்சம்

நவாம்சத்தைப் பற்றி

நவாம்சம் என்பது ராசியின் 1/9தாவது பகுதி. Navamsa is the one by ninth division of a rasi chart. It is the magnified version of a rasi chart

ராசிச் சக்கரம்தான் பிரதானமானது. நவாம்சச் சக்கரம் உபரியானது. வைத்தியர் நம்மை சட்டையோடும் பரிசோதனை செய்வார். சட்டையைக் கழற்றிவிட்டும் பரிசோதனை செய்வார். அதுபோல ஜாதகத்தை சட்டையோடு பரிசோதனை செய்வதற்கு ராசிச் சக்கரம். ஜாதகத்தின் சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்வதற்கு நவாம்சச் சக்கரம். சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்யும்போது பல விஷயங்கள் எளிதில் புலப்படும். ஆனால், அதற்காக ஒவ்வொரு முறையும் சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்வது விவகாரமாக இருக்கும். ஆகவே எப்போது சட்டையோடு பரிசோதனை செய்ய வேண்டும், எப்போது சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை…

 

, நிஸ்வா யோகம்

நிஸ்வா யோகம்! ஸ்வா எனும் வடமொழிச்சொல்லிற்கு செல்வம் என்று பொருள்.நி என்னும் சொல் உடன் சேரும்போது மறுக்கப்பெற்ற செல்வம் என்று பொருள்படும்! (Sva means Wealth and Nisva means one devoid of wealth) லட்சணம் என்பது ‘அவ’ எனும் சொல்லைச் சேர்க்கும்போது மாறுபடுவதைப் போல அது என்று வைத்துக் கொள்ளுங்கள் செல்வம் எப்படி மறுக்கப்படும்? மூன்று விதமான நிலைப்பாடுகள் உள்ளன.

1. வராமல் போகலாம்.

2. வருவதைவிட நமது தேவை அதிகமாகப்போய் பற்றாத நிலை ஏற்படலாம்.

3. தேவையான அளவு அல்லது தேவைக்கு அதிகமாகவே வந்து நம் கையில் தங்காமல் போகலாம். எது எப்படியோ, பல சமயங்களில் நாம் பணமின்றி அல்லாட நேரிடும் நிலை ஏற்படலாம். அதற்குப் பெயர்தான் நிஸ்வா யோகம்

அதற்கான அமைப்பு என்ன? இரண்டாம் வீட்டு அதிபதி தீமைபயக்கும் 6, 8, 12ஆம் வீடுகள் ஒன்றில் ஜாதகத்தில் இருப்பது இந்த அமைப்பாகும். இந்த அவயோகமாகும்.

ஆகவே, பனம், பொருள், செல்வம் இல்லாவிட்டால் வாழ்க்கை என்னவாகும் என்பது என்னைவிட உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் என்பதால் இதற்கு விளக்கம் எழுதவில்லை. உங்கள் சிந்தனைக்கே அதை விட்டுவிடுகிறேன்.

பரிகாரம் என்ன? உபவாசம் இருப்பதும், தீவிர இறைவழிபாடும் மட்டுமே இதற்குப் பரிகாரம். பிரச்சினை முழுமையாக நீங்கி விடுமா? ஓரளவு குறையும். அதோடு தாக்குப்பிடிக்கும் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்

எச்சரிக்கை: யோகங்கள் என்பது வடித்த சாதத்தைப் போன்றது. வடித்த சாதத்தில், பருப்பையும் நெய்யையும் சேர்த்தால் சுவையாக இருக்கும். அல்லது சாம்பாரை ஊற்றிக் குழைத்துச் சாப்பிட்டால், வேறு ஒரு சுவை கிடைக்கும். வற்றல் குழம்பு, மோர்க்குழம்பு, ரசம், தயிர் என்று விதம் விதமாகச் சேர்க்கும்போது, விதம் விதமாகச் சுவையான உணவு கிடைக்கும். அதுபோல யோகங்களுடன், மற்ற கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை, சுயவர்க்கப்பரல்கள் எனும் மசாலாக்களைச் சேர்க்கும்போது யோகங்களின் சுவை அதாவது தன்மை அதாவது பலன்களும் மாறுபடும். அதை நினைவில் வையுங்கள் ஆகவே இந்த அவயோகம் இருப்பவர்கள், பயந்துவிடாமல், ஜாதகத்தின் மற்ற அம்சங்களையும் அலசிப் பார்க்க வேண்டுகிறேன்.

, தேவேந்திர யோகம்

தேவேந்திர யோகம் தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக இருந்த தேவேந்திரனுக்குச் சமமாக விளங்கக்கூடிய யோகத்தைக் கொடுக்கும் ஜாதக அமைப்பு என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்திர ராசிகள் (Fixed signs) 1. ரிஷபம் (Taurus), 2. சிம்மம் (Leo), 3. விருச்சிகம் (Scorpio) 4. கும்பம் (Aquarius) ஆக இந்த 4 ராசிக்காரர்களுக்கு மட்டும்தான் இந்த யோகம் இருக்கலாம்! ”சார், எனக்கு ராசியில், இந்த லக்கின அமைப்பு இல்லை, நவாம்சத்தில் இருக்கிறது பரவாயில்லையா?” பரவாயில்லை, உங்களுக்கும் இருக்கலாம். மேலே படியுங்கள். உங்கள் மனைவிக்கு இந்த அமைப்பு இருந்தாலும் நல்லதுதான். அவரை அனுசரித்துப் போனால், நீங்களும் அவர் தயவால் இந்த யோகத்தின் பலனை (நன்றாகக் கவனிக்கவும் அவர் தயவால்) அனுபவிக்கலாம்

யோகத்தின் பலன் என்ன? 1. ஜாதகன் அதீத அழகுடன் அல்லது அடுத்தவரைக் கவரும்படியான அழகுடன் இருப்பான்.(Handsome) 2. அழகான பெண்களின் கடைக்கண் பார்வைக்கு ஆளாவான். 3. ஏகப்பட்ட சொத்துக்கள், வீடுகள், வாசல்கள், நிலங்கள் என்று பெரிய செல்வந்தனாக இருப்பான் (Blog படிக்க நேரம் இருக்குமா?) 4. சமூகத்தில், நாட்டில் பெரிய அந்தஸ்துடன் இருப்பான்

யோகத்திற்கான அமைப்பு. 1. லக்கினம் ஸ்திர ராசியாக இருக்க வேண்டும் 2. லக்கினாதிபதி 11ல் இருக்க வேண்டும். 3. 11ஆம் அதிபதி லக்கினத்தில் இருக்க வேண்டும் 4. 2ஆம் அதிபதியும், 10ஆம் அதிபதியும் ஒருவர் வீட்டில் மற்றொருவர் என்று பரிவர்த்தனையாகி இருக்க வேண்டும் அதாவது இரண்டு பரிவர்த்தனைகள்: லக்கின அதிபதி + 11ஆம் அதிபதி இரண்டாம் வீட்டுக்காரன் + 10ஆம் வீட்டுக்காரன் A planetary combination formed by Ascendant placed in a fixed sign, Ascendant lord in 11th, the lord of 11th in Ascendant, and the lords of 2nd and 10th houses in mutual exchange. This yoga is powerful in making the individual extremely beautiful, loved by pretty women, owner of vast wealth and villas. He attains a very high social status.

 

, ஆர செளரி யோகம்

ஆர செளரி யோகம்! யோகத்தைத் தெரிந்து கொள்ளும் முன் அதன் பெயர் விளக்கத்தைத் தெரிந்துகொள்வோம். ஆர என்னும் வட மொழிச் சொல்லிற்கு நேரடி விளக்கம் இல்லை. ஆரண்யம் (காடு) என்பதன் சுருக்கம் என்கிறது ஒரு நூல். செளரி என்பதற்கு சனி என்று பொருளாம்.

சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் அல்லது கூட்டணியால் எற்படுவதுதான் இந்த ஆர செளரி யோகம்! பலன்: சொல்லும்படியாக இல்லை. ஜாதகனுக்குப் பலவிதமான கேடுகள் ஏற்படும். Planetary combination between Saturn and Mars. It produces serious afflictions.

சரி எப்படி எடுத்துக்கொள்வது? எதெது எங்கே இருக்க வேண்டுமோ, அங்கே இருப்பது நல்லது. நம்மைக் கொண்டுபோய்க் காட்டில் விட்டால் என்ன ஆகும்? கிறுக்குப் பிடித்துவிடாதா? அதுபோல காட்டில் இருக்க வேண்டிய ஒரு சிறுத்தையை வீட்டில் கொண்டு வந்து விட்டால் என்ன ஆகும்? சும்மா விடாமல் ஒரு கரடியுடன் சேர்த்துவிட்டால் என்ன ஆகும் அது போன்ற நிலைமைதான் ஆகும்போல உள்ளது, இந்த யோகத்தால்

எல்லோருக்குமா? இல்லை! வழக்கம்போல, அவர்கள் மீது விழும் சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை, அதோடு அவர்களின் சுயவர்க்கப்பரல்கள், இருக்கும் இடத்தின் மொத்த வர்க்கப் பரல்கள் ஆகியவற்றை வைத்து ஜாதகத்திற்கு ஜாதகம் அது வேறுபடும்.

 

, அமரக் யோகம்

அமரக் யோகம்!

ஏழாம் வீட்டதிபதி ஒன்பதாம் வீட்டிலும், ஒன்பதாம் வீட்டதிபதி ஏழாம் வீட்டிலும், இடம் மாறி அமர்ந்திக்கும் நிலைமையே இந்த அமரக் யோகத்தைக் குறிக்கும். மாறி அமர்ந்ததோடு அல்லாமல் வலுவாக வேறு இருக்க வேண்டுமாம். அதாவது ஆட்சி, அல்லது உச்சம் அல்லது அஷடகவர்க் கத்தில் 5ம் அல்லது மேற்பட்ட பரல்களையும் பெற்றிருக்க வேண்டும்

பலன்: ஏழாம் வீட்டோடும் பாக்கிய ஸ்தானத்தோடும் சம்பந்தப்பட்ட யோகம் இது. இந்த யோகம் உள்ள ஜாதகனுக்கு, டக்கராக மனைவி கிடைப்பாள். சினிமாவை வைத்து உதாரணம் சொல்ல விருப்பமில்லை. இதற்கு உதாரணம் சொன்னால், ராமனுக்கு ஒரு சீதை கிடைத்ததைப்போல அல்லது லெட்சுமணனுக்கு ஒரு ஊர்மிளா கிடைத்ததைப் போல அற்புதமான மனைவி கிடைப்பாள். அவளைப் பார்த்துப் பார்த்து ஜாதகன் மகிழலாம். வயதானா பிறகும் அருகில் வைத்துக் கொஞ்சலாம். ’உனக்காக நான், எனக்காக நீ’ என்று வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். Made for each other என்று போடுகிறார்களே அப்படியொரு அம்சம் வாழ்க்கையில் இருக்கும்!

, நல்ல தொழில் அல்லது நல்ல வேலை அமைய வேண்டும்

நல்ல தொழில் அல்லது நல்ல வேலை அமைய வேண்டும்

1.பத்தாம் வீடு

2.பத்தாம் வீட்டு அதிபதி

3.பத்தில் வந்து அமரும் கிரகம்

4.பத்தாம் வீட்டின் மேல் விழும்பார்வைகள்

5.பத்தாம் அதிபதியின் மேல் விழும் பார்வைகள்

6.அம்சத்தில் பத்தாம் வீட்டு அதிபதியின் நிலைமை

7.பத்தாம் வீட்டுக்காரகனுடன் கூட்டணி போட்டுள்ள கிரகங்கள்

8.பத்தாம் வீட்டின் அஷ்டகவர்க்கப் பரல்கள்

9.பத்தாம் அதிபதியின் சுய வர்க்கப் பரல்கள்

10. கர்மகாரகன் சனியின் நிலைமை

ஆகியவற்றை அலச வேண்டும். அலசினால் ஒரு முடிவிற்கு வரலாம்

, பெளர்ணமியில்

பெளர்ணமியில் பிறந்தவர்கள்! இந்திய ஜோதிடத்தில் சந்திரனுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அது நமது அன்னையை அடையாளப் படுத்தும் கிரகம். நமது பெண்களை அடையாளப் படுத்தும் கிரகம். சந்திரன் சுபக்கிரகம். குழந்தையாக இருக்கும்போது உடல் நலம், உரிய வயதில் வளர்ச்சி, வாழ்க்கையில் செழிப்பு, அதிர்ஷ்டம், நமது மன உணர்வுகள் ஆகியவற்றிற்கெல்லாம் காரணகர்த்தா அவர் நீரின்றி அமையாது உலகு. நீருக்கான கிரகம் அவர். கடல் அலைகளைக் கட்டுக்குள் வைத்திருப்பவர் அவர். ஆறுகளில் நீரோட்டங்களைக் கட்டுக்குள் வைத்திருப்பவர் அவர். தாவரங்கள் அனைத்திற்கும் அதிபதி அவர்தான். உலகைப் பசுமையாக வைத்திருப்பவர் அவர்.

1. Moon rules peace of mind, comfort, general well-being, and also the fortune of a person.

2. The Moon gives sense of purpose, intuitive nature, sensuality, taste, youth, love of poetry, fine arts and music, love of jewelry, attractive appearance, wealth and good fortune.

3. It makes us moody, emotional, and sensitive.

ஜாதகனுக்குச் சந்திரன் (இருப்பிடம், சேர்க்கை அல்லது பார்வையால்) சரியாக அமையாவிட்டால், வெற்றி என்பது கானல் நீராக இருக்கும். வெற்றிகளை நேருக்கு நேராகச் சந்திக்க முடியாது. தலையைச் சுற்றி (அதாவது பின் மண்டையைச் சுற்றி) மூக்கத்தொடுவது போல அனைத்துக் காரியங்களையும் செய்ய நேரிடும். சிலர் அடைப்படை வசதிகளுக்குக் கூட அவதிப்பட நேரிடும். சிலர் சின்ன வயதில் அதாவது 21 வயதுவரை பலவீனமாக அல்லது நோயுடன் இருக்க நேரிடும்.

For persons whose Moon is not rightly placed in their horoscopes or is ill-aspected, success becomes very illusive or difficult. Sometimes it even becomes difficult to achieve a comfortable life on earth. It makes such people weak or sick in their early years.

வளர்பிறைப் பெளர்ணமி காலத்தில் சுமார் 14 நாட்களை வளர்ச்சியான நாட்கள் என்பார்கள். அதாவது அமாவாசைக்கு அடுத்த நாளில் துவங்கி, பெளர்ணமிவரை உள்ள இடைப்பட்ட நாட்கள் சந்திரனுக்கு உகந்த நாட்கள் என்பார்கள்.. பெளர்ணமிக்கு அடுத்த நாளில் துவங்கி, அமாவாசைவரை உள்ள இடைப்பட்ட நாட்கள் சந்திரனுக்கு உகந்த நாட்கள் அல்ல – தேய்பிறை நாட்கள் என்பார்கள். உகந்த நாட்களில் செய்யும் சுப காரியங்கள் நன்றாக இருக்கும் என்பார்கள். அதனால்தான் சிலர் வளர்பிறைச் சந்திர காலத்தில் கிடைக்கும் முகூர்த்த நாட்களில் தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணத்தை நடத்தி வைப்பார்கள். ”வளர்பிறையில் பிறந்தவர்கள் வளமாக இருப்பார்கள்!” என்று சொல்வார்கள் The Moon is auspicious for those who are born in the ascending Moon cycle and malefic for those who are born in the descending Moon cycle. நமக்கு அந்தக் கதையெல்லாம் வேண்டாம். ஜாதகத்தில் சந்திரன் வேறு கிரகங்களின் அமைப்பு மற்றும் பார்வைகளால் நல்ல நிலைமையில் இருந்தால் – அதாவது சந்திரன் தன்னுடைய சுயவர்க்கப் பரல்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தால் அது நன்மையையே செய்யும். ஜாதகன் எப்போது மகிழ்ச்சியான மன நிலையில் இருப்பான். அப்படிப்பட்ட பிறப்பே நமக்குப் போதும். அமாவாசை, பெளர்ணமி குழப்பமெல்லாம நமக்கு வேண்டாம்.

சில உதாரணங்களைக் கொடுத்துள்ளேன்:

1 சிம்ம லக்கினத்திற்குச் சந்திரன் விரையாதிபதி. அவர் லக்கினத்தில் இருந்து, 7ஆம் வீடான (பகை வீட்டில் – அது சனியின் வீடு) சூரியன் இருந்தால், அந்த

2 கிரகங்களும் ஜாதகனுக்குப் பெரிதாக என்ன நன்மையைச் செய்து விடப் போகின்றன?

2. கன்னி லக்கினத்திற்கு, சூரியன் விரைய அதிபதி – அவர் 7ஆம் வீடான மீனத்தில் இருந்து, கன்னியில் இருக்கும் சந்திரனைப் பார்ப்பதால், அந்த 2 கிரகங்களும் ஜாதகனுக்குப் பெரிதாக என்ன நன்மையைச் செய்து விடப் போகின்றன? 3 துலா லக்கினத்திற்குச் சொல்லவே வேண்டாம் – சூரியன் இங்கே நீசமடைந்து விடுவார். 7ல் சந்திரன் இருந்தாலும் அந்த 2 கிரகங்களும் ஜாதகனுக்குப் பெரிதாக என்ன நன்மையைச் செய்து விடப் போகின்றன? இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.

******ஆகவே உங்கள் பிறப்பு பெளர்ணமியன்றா அல்லது அமாவாசையன்றா என்பது முக்கியமல்ல! உங்களின் லக்கினமும் உங்கள் ஜாதகத்தில் 9 கோள்களின் அமைப்பும் மட்டுமே முக்கியம்.

, அமாவாசையன்று பிறந்தவர்கள்

அமாவாசையன்று பிறந்தவர்கள் ஒரு திரைப்படத்தில் நம்ம மணியண்ணன், செந்திலைப் பார்த்து அடிக்கடி இப்படிச் சொல்வார்: “அட, அமாவாசைக்குப் பொறந்தவனே!” அமாவாசையன்று பிறந்தால் இழிவா? இல்லை. எல்லா நாட்களுமே நல்ல நாட்கள்தான். அதை உணர்த்தத்தான் கோகுல கிருஷ்ணன் அஷ்டமித் திதியில் பிறந்தார். ஸ்ரீராமபிரான் நவமித் திதியில் அவதரித்தார். சூரியனும் சந்திரனும் ஒரு ராசியின் 12 பாகைகளுக்குள் இருக்கும் தினம் அமாவாசை. அதுவும் ஒரு பாகை வித்தியாசத்தில் இருக்கும் நேரம் முழு அமாவாசை. அமாவாசையன்று சூரியனின் நெருக்கத்தால் சந்திரன் அஸ்தமனமாகிவிடும். அமாவாசை திதியில் பிறப்பது அவயோகமாகக் கருதப்படுகிறது. அந்த தினத்தில் பிறக்கும் ஜாதகனின் வாழ்க்கை (மனப்) போராட்டங்கள் மிகுந்ததாக இருக்கும். சந்திரன் மனதிற்கு உரிய காரகன். அதை நினைவில் வையுங்கள். ஒரு கவிஞன் சொன்னான்: ”சுற்றும்வரை பூமி எரியும்வரை நெருப்பு போராடும்வரை மனிதன்!” ஆகவே போராட்டம் இல்லாத வாழ்க்கை இரசிக்காது. அமாவாசையன்று பிறந்தவர்கள் கவலைப் பட வேண்டாம். உங்கள் வாழ்க்கை ரசனைக்குரியதாக இருக்கும். பலவிதமான உணர்வுகள் நிரம்பியதாக இருக்கும். அதோடு (மனப்) போராட்டங்களுக்கான ஆயுதங்களும் உங்களுக்கு வழங்கப்பெற்றிருக்கும். அதவது உங்களுக்கு நஷ்ட ஈடும் வழங்கப்பெற்றிருக்கும். இல்லையென்றால் உங்களுடைய ஜாதகத்தின் மதிப்பெண் எப்படி 337ஆக வரும் – சொல்லுங்கள்?

, மகாபாக்கிய யோகம்

மகாபாக்கிய யோகம்!

ஒற்றைப்படை ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், துலாம்,தனுசு, கும்பம் ஆகிய ஆறு இடங்களில் லக்கினம், சூரியன், சந்திரன், ஆகியவைகள் அமைந்திருக்கப் பகல் நேரத்தில் பிறந்த ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு. இப்படியும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளலாம் – மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்றும் காற்று ராசிகளிலும். மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்றும் நெருப்பு ராசிகளிலும் சூரியன், சந்திரன், ஆகியவைகள் அமைந்திருக்கப் பகல் நேரத்தில் பிறந்த ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு. பகற் பொழுதில் பிறக்கும் ஜாதகனுக்கு, ஆண்களுக்கென்று ஜோதிடத்தில் சொல்லப்படும் பலன்கள் எல்லாம் தேடி வரும்

 

பெண்களுக்கு: இரட்டைப்படை ராசிகளான ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ஆறு இடங்களில் லக்கினம், சூரியன், சந்திரன், ஆகியவைகள் அமைந்திருக்க இரவு நேரத்தில் பிறந்த ஜாதகிக்கு இந்த யோகம் உண்டு. இப்படியும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளலாம் – ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்றும் பூமி ராசிகளிலும், கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்றும் நீர் ராசிகளிலும்,லக்கினம், சூரியன், சந்திரன், ஆகியவைகள் அமைந்திருக்க இரவு நேரத்தில் பிறந்த ஜாதகிக்கு இந்த யோகம் உண்டு. இரவுப் பொழுதில் பிறக்கும் ஜாதகிக்கு, பெண்களுக்கென்று ஜோதிடத்தில் சொல்லப்படும் பலன்கள் எல்லாம் தேடி வரும்

பலன்: நல்ல பண்புகளைப் பெற்றவனாக அல்லது பெற்றவளாக ஜாதகன்/ஜாதகி இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்கும். அன்பே உருவானவர்களாக இருப்பார்கள். மற்றவர்களிடம் இவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் இருக்கும்! Mahabhagya Yoga for Men – in day time birth, when Sun,Moon and ascendant in odd signs and for Women – night time birth when Sun,Moon and ascendant in even signs,than this yoga is formed.The native of this yoga is to be of good character,Helping to others,Kind and famous. Nullification is depend on placement of other planets.

”ஓகோ, இதுதான் இந்த யோகத்தின் பலனா? நான் மகா பாக்கியம் எனும் தலைப்பைப் பார்த்தவுடன், ரிலையன்ஸ் அம்பானி போல செல்வந்தராகும் பாக்கியமோ என்று நினைத்து, மூச்சிரைக்க ஓடோடி வந்தேன்.” என்று சொல்பவர்கள் அடுத்துவரும் வரிகளைப் படியுங்கள். பணம் மகிழ்ச்சியைத்தராது; குணம்தான் மகிழ்ச்சியைத்தரும். நல்ல குணத்தைப் பெறுவதற்கான யோகம் இது! நல்ல குணத்தைப் பெற்றிருப்பதுதான் மகாபாக்கியம்.

, தரித்திர யோகம்

தரித்திர யோகம். இது ஒரு அவயோகம்.

பொருள் இல்லாத, கையில் காசு இல்லாத, அன்றாடம் பணத்திற்கு அல்லாடும் நிலைமையை, தரித்திர நிலைமை என்று வைத்துக் கொள்ளலாம். வேறு விதமான தரித்திரங்களும் உள்ளன. ஆனால் அவற்றை யாரும் சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை. உதாரணத்திற்கு, திருமணமானவர்களுக்கு, அனுசரனையான மனைவி இல்லை என்றால், அதுவும் தரித்திர நிலைமைதான். சோம்பேறியான கணவன் அல்லது மனைவி வாழ்க்கைக்குத் தரித்திரமானவர்களே!

யோகத்தின் அமைப்பு: பலவிதமான அமைப்புக்கள் உள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று இருந்தாலும் இந்த யோகம் உண்டு. மனிதனை அல்லாட வைக்கும் கிரக அமைப்புக்கள்:

1. குரு 8ஆம் வீட்டு அதிபதியாக இருந்து, ஜாதகத்தில் லக்கினாதிபதியும், ஒன்பதாம் அதிபதியும், 11ஆம் அதிபதியும் வலிமையின்றிக் கெட்டிருப்பது, இந்த யோகத்தை உண்டாக்கும்

2. குரு, செவ்வாய், சனி, புதன் ஆகிய நான்கு கிரகங்களும் நீசம் பெற்று அல்லது அஸ்தமனமாகி 5,6,8,11,12ஆம் வீடுகளில் அம்ர்ந்திருக்கும் நிலைப்பாடு இந்த யோகத்தை உண்டாக்கும்.

3. ஒன்பதில் சனி இருந்து மற்றொரு தீய கிரகத்தின் பார்வையைப் பெறுவதும், லக்கினத்தில் சூரியனும், புதனும் கூட்டாக இருந்து, நவாம்ச லக்கினம் மீனமாக இருக்கும் நிலைமை இந்த யோகத்தை உண்டாக்கும்

4. குரு, புதன், சுக்கிரன், சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் 8,6,12,ஆம் வீடுகளில் இருப்பதும், 12ஆம் வீட்டதிபதி சூரியனின் பார்வையைப் பெறுவதும் இந்த யோகத்தை உண்டாக்கும்

5. வலிமை குன்றிய சுக்கிரன், குரு, சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் 1,10,11,6,7,8 ஆகிய வீடுகளில் அமர்ந்திருக்கும் நிலைமை இந்த யோகத்தை உண்டாக்கும்

6. நீசம் பெற்ற சுக்கிரன் லக்கினத்தில் இருந்து, (கன்னி லக்கினத்திற்கு மட்டும் அது சாத்தியம்) ஜாதகத்தில் குரு, சந்திரன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் நீசம் பெற்றிருக்கும் நிலை இந்த யோகத்தை உண்டாக்கும்!

7. நவாம்ச லக்கினம், சனி, மற்றும் வலிமை குன்றிய குருவின் பார்வையில் இருப்பது இந்த யோகத்தை உண்டாக்கும்

8. குரு ஜாதகத்தில் 6 அல்லது 8ஆம் வீட்டில் இருந்து, குருவிற்கு அந்த இடம் ஆட்சி அல்லது உச்ச வீடாக இல்லாமல் இருக்கும் நிலை இந்த யோகத்தை உண்டாக்கும்

9. லக்கினம் ஸ்திர ராசியாக இருந்து, கேந்திர கோணங்களில் தீய கிரகங்கள் வலுவாக இருக்கும் நிலைமை இந்த யோகத்தை உண்டாக்கும்

10. இரவு நேரப்பிறப்பாக இருந்து, ஜாதகனின் கேந்திர கோணங்களில் நன்மை செய்யக்கூடிய கிரகங்கள் வலிமை இழந்து இருக்கும் நிலைமை இந்த யோகத்தை உண்டாக்கும் இந்தத் தரித்திர அமைப்புள்ள ஜாதகனின் வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். அதிர்ஷ்டமில்லாமல் பல முயற்சிகளைச் செய்து கொண்டே இருக்க நேரிடும். வாழ்க்கை பலவிதங்களில் அவதியாக இருக்கும்.சமூகத்தில் உரிய மதிப்பு இருக்காது. எதிர்பாராத தோல்விகளைச் சந்திக்க நேரிடும்.

, அமலா யோகம்

அமலா யோகம்!

யோகத்தின் பெயர்: அமலா யோகம். அமலா எனும் வடமொழிச்சொல்லிற்கு சுத்தமானது (pure) என்று பொருள்.

யோகத்தின் அமைப்பு: லக்கினத்திலிருந்து பத்தாம் வீட்டில் சுபக்கிரகம் இருக்க வேண்டும். சந்திரராசிக்குப் பத்தாம் வீட்டில் சுபக்கிரகம் இருந்தாலும் இந்த யோகம் உண்டு

பலன்: ஜாதகனின் வாழ்க்கை வளமாக இருக்கும். ஜாதகன் பெயர், புகழுடன் இருப்பான். நிறைய பொருள் ஈட்டுவான். நல்ல ஆண் வாரிசுகளை உடையவனாக இருப்பான்.

, சரஸ்வதி யோகம்

Lessons on yogas: சரஸ்வதி யோகம் சரஸ்வதி யோகம் என்றவுடன், வெள்ளைத்தாமரைப் பூவில் இருக்கும், வீணை செய்யும் ஒலியில் இருக்கும் சரஸ்வதியைப் போல ஜாதகனும் இருப்பான் என்று நினைத்துவிடாதீர்கள். இது அதீதப் படிப்பிற்கான, படித்ததை மனதில் வைப்பதற்கான யோகத்தைக் குறிக்கும். ஜாதகன், வேதங்களையும், உபநிடதங்களையும், புராணங்களையும், இன்னும் பல நூல்களையும் கற்றுத் தேர்ந்தவனாக இருப்பான். இன்றைய நிலையில் அதை எல்லாம் கற்றுத் தேர்ந்தால், வேலை எங்கே கிடைக்கும்? பூவா’விற்கு என்ன செய்வது? ஆகவே இன்றைய நிலையில் வாழ்க்கையின் உயர்விற்குத் தேவையான பல நூல்களையும் ஜாதகன் கற்றுத் தேர்ந்திருப்பான் என்று வைத்துக் கொள்ளுங்கள். வங்கி மேலான்மை என்றால் அதற்குத் தேவையான நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருப்பான். கணினி மேலான்மை என்றால் அதற்குத் தேவையான நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருப்பான். திரைத்துறை என்றால், அதற்குத் தேவையான அத்தனை விஷயங்கள் அனைத்தையும் கற்று வைத்திருப்பான் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

யோகத்தின் வடமொழிப் பெயர்: வைரின்ச்ச யோகா (Vairincha Yoga) Vairinchi means Saraswathi and this is a yoga for learning. யோகத்தின் அமைப்பு: குருவும், சனீஷ்வரனும் திரிகோணத்தில் இருக்க வேண்டும். லக்கினாதிபதியும் திரிகோணத்தில் இருக்கவேண்டும். அதோடு மூவரும் வலிமையோடு இருக்க வேண்டும். இந்த வலிமை (strength) பற்றிப் பலமுறைகள் சொல்லியிருக்கிறேன். ஆகவே அதை மீண்டும் சொல்லி பிளேடு போட விரும்பவில்லை!

இந்த யோகத்தால் ஜாதகனுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள் ஜாதகன் அறிவு ஜீவியாக இருப்பான். உங்கள் மொழியில் சொன்னால் மேதையாக இருப்பான். நகைச்சுவை உணர்வு மிக்கவனாக இருப்பான். அற வழியில் நடப்பவனாக இருப்பான். எண்ணற்ற சீடர்கள் இருப்பார்கள். தெய்வ அருள் இருக்கும். எல்லோரும் வணங்கும் நிலையில் இருப்பான். நீண்ட ஆயுளைப் பெற்றிருப்பான். செல்வத்துடன் இருப்பான்.

இருப்பதே மூன்று திரிகோணம். அதில் அந்த மூவரும் இருக்க வேண்டுமாம். கொஞ்சம் கஷ்டம்தான். அதாவது நம்மைப் போன்று ப்ளாக்குகளில் எழுதும் அல்லது ப்ளாக்குகளைப் படிக்கும் சாமான்யர்களுக்கு இந்த அமைப்பு இருக்கும் வாய்ப்பு இல்லை. அந்தக் காலத்தில் ரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும் இந்த அமைப்பு இருந்திருக்கலாம்.

, புனர்பூ தோஷம்

புனர்பூ தோஷம் என்பது சந்திரனுக்கும், சனிக்கும் ஜாதகத்தில் உள்ள தொடர்பு (குறிப்பாக சேர்க்கை அல்லது பரிவர்த்தனை) திருமணவாழ்வில் பல சிரமங்களை/துன்பங்களை உண்டாக்கும். தலைவலி, பய உணர்வு, பரபரப்பு, படபடப்பு போன்றவையும் அதன் உப விளைவுகள்தான் (Connection between Saturn and Moon is known as Punarphoo Dosham. Whenever Saturn has got any connection what-so-even with Moon, there will be some obstacle or impediment, not only during negotiation but also at the time of fixation and even at the time of celebration of the marriage. This connection between Moon and Saturn causes delay) இந்த அமைப்பில் சூரியன் உள்ளே நுழைந்தால் (அந்த இரண்டு கிரகங்களுடன் சூரியன் இருந்ததாலும், அல்லது அவைகளைத் தன் பார்வையில் வைத்திருந்தாலும்) புனர்பூ தோஷம் நீங்கிவிடும். connection of Sun with the Punarphoo causing planets (Saturn and Moon) results in cancellation of Punarphoo. Precisely speaking, cancellation takes place due to following conditions: 1. Sat or Moon or both in association with Sun in one sign (could involve even two houses) 2. Sat or Moon in the star of Sun 3. Sun is in a star, lord of which is near either Moon or Saturn. 4. Sun is in the star of either Moon or Sat 5. Any planet near the Moon or Saturn, but is posited in the star of Sun 6. Sat or Moon is in the sub-sub of Sun

, ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கும், தொழிலாகச் செய்வதற்கும், ஆராய்ச்சி மட்டுமே செய்யவும் தனித்தனியான அமைப்புகள் உண்டா?

ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கும், தொழிலாகச் செய்வதற்கும், ஆராய்ச்சி மட்டுமே செய்யவும் தனித்தனியான அமைப்புகள் உண்டா?

புதனின் ஆதிபத்தியம் வேண்டும் என்று சொல்லி விடாதீர்கள்…(சில ஜோதிடர்கள் சொல்வதனால் கேட்கிறேன்) கூட்டு, அவியல், பொரியல் என்று சமையலில் காய்களின் எண்ணிக்கையும் அளவும் வேறு படுவதைப் போல, இதிலும் வேறுபாடு உண்டு. புதன் நன்றாக இருந்தால் கற்றுக் கொள்ளலாம். புதனும் குருவும் நன்றாக இருந்தால் கற்றுக்கொண்டு ஆராய்ச்சி செய்யலாம். அவர்கள் இருவரோடு, சனி அல்லது பத்தாம் இடத்து அதிபதியும் கலக்கலாக இருந்தால் ஜோதிடத்தைத் தொழிலாகச் செய்யலாம். செய்து காசு பார்க்க வேண்டுமென்றால் அந்த அமைப்புடன், 2 & 11ஆம் வீடுகளும் நன்றாக இருக்க வேண்டும். என்ன தலை சுற்றுகிறதா? தலை சுற்றாமல் இருக்க 3 & 6ஆம் இடத்து அதிபதிகள் வலிமையாக இருக்க வேண்டும்

, திருமண நட்சத்திர பொருத்தம்

Hello world!

February 17, 2010

psssrf.org.in இணையதளத்தில் என் ஜாதகத்தை ஆன் லைன்னில் கணித்தேன் மிகவும் திருப்திகரமாக இருந்தது அந்த இணையதள இயக்குனர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் psssrf.org.in பலருக்கு தெரியவில்லை எனவே பல இணையதளங்களில் இருந்த சுட்ட ஜாதக விபரங்களை வைத்து psssrf.org.in க்கு லிங்கு கொடுக்கிறேன் எனக்கு அலுவலக நேரம் முடிந்ததும் மாலை இரவு நேரங்களில் இன்டர்நெட்டில் இரண்டு ஆண்டிற்க்கு மேலாக இணையதளங்களில் இருந்த ஜாதக விபரங்களை சேகரிப்பது என் பொழுதுபோக்கு…….